இந்திய வனப்பணி தேர்வில் அந்தியூர் மாணவர் தமிழக அளவில் முதலிடம்

இந்திய வனப்பணி தேர்வில் அந்தியூர் மாணவர் தமிழக அளவில் முதலிடம்
X

மாணவர் கிருபாகரன்

இந்திய வனப் பணி தேர்வில் (ஐ.எஃப்.எஸ்.), அந்தியூர் மாணவர் அகில இந்திய அளவில் 16-ஆம் இடம் பிடித்து சிறப்பு சேர்த்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த அம்மாபேட்டை அருகே உள்ள சென்னம்பட்டி ஜர்த்தல் பகுதியை சேர்ந்தவர் தங்கராஜ்.விவசாயி. இவரது இளைய மகன் கிருபானந்தம். பொறியியல் பட்டம் பயின்று கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் மத்திய அரசில் பணியிடம் பெற மத்திய தேர்வாணையத்தின் கீழ் போட்டி தேர்வுகளை எழுதி வந்துள்ளார்.

இதையடுத்து கடந்த 9 முறை போட்டி தேர்வுகளை எதிர்கொண்டு தோல்வியுற்ற நிலையில் மனம் தளராமல் கடந்த 2021-ஆம் ஆண்டு 10-வது முறையாக மத்திய தேர்வாணையத்தின் கீழ் நடைபெற்ற இந்திய வன பணி தேர்வில் தேர்வு எழுதினார்.

இதன் முடிவுகள் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியாகியுள்ளது. இதில் இளைஞர் கிருபானந்தம் மாநில அளவில் முதல் இடமும், இந்திய அளவில் 16-வது இடத்தை பெற்று வெற்றி பெற்றுள்ளார். விவசாய குடும்பத்தை சேர்ந்தவரான இந்த மாணவர் இந்திய வனப்பணிக்கு தேர்வாகியுள்ளது பெருமை அடைய வைத்துள்ளது.

Tags

Next Story
ஏஐ ஆல் மனிதர்களுக்கு ஆபத்தா? உண்மை என்ன?