அந்தியூர் காவல்துறையினரின் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

அந்தியூர் காவல்துறையினரின் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
X

அந்தியூரில் உள்ள முக்கிய வீதிகள் வழியாக போதைப்பொருள் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

அந்தியூர் காவல்துறை சார்பில் நடந்த போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர்.

ஈரோடு மாவட்டம், அந்தியூர் காவல்துறை சார்பில் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி இன்று மாலை பத்திரகாளியம்மன் கோவிலில் இருந்து துவங்கியது.

இப்பேரணியை கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தீபக் சிவாச் கொடியசைத்து துவக்கி வைத்தார். பத்ரகாளியம்மன் கோவிலில் இருந்து புறப்பட்ட பேரணி, சிங்கார வீதி ராஜவீதி வழியாக மீண்டும் பத்ரகாளியம்மன் கோவிலை வந்தடைந்தது.

பேரணியில் கலந்து கொண்ட மாணவ மாணவியர்கள், போதைப்பொருள் ஒழிப்பு சம்பந்தமான பதாகைகளை ஏந்தி கோஷமிட்ட சென்றனர்.

இந்நிகழ்ச்சியில் அந்தியூர் காவல் ஆய்வாளர் மோகன் ராஜ், அந்தியூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர் திருமாவளவன் மற்றும் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மங்களம் மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவியர்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!