அந்தியூர் அருகே டூ வீலர் மீது லாரி மோதி விபத்து - இருவர் பலி

அந்தியூர் அருகே டூ வீலர் மீது லாரி மோதி விபத்து - இருவர் பலி
X

விபத்தில் இறந்த கார்த்தி. 

அந்தியூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் அரசு பேருந்து நடத்துனர் உள்பட இருவர் உயிரிழந்தனர்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள ஒலகடம் ஊராட்சி நாகிரெட்டிபாளையத்தைச் சேர்ந்தவர் ரவி (வயது 45). அதே பகுதியை சேர்ந்த இவரது நண்பர் கார்த்தி (வயது 35). கார்த்தி, அந்தியூர் அரசு பேருந்து கிளையில் நடத்துனர். நேற்று இரவு, இருசக்கர வாகனத்தில் இருவரும் அந்தியூரில் இருந்து, நாகிரெட்டிபாளையத்துக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது, கெம்மியம்பட்டி அருகே சென்றபோது எதிரில் வந்த லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்து ஏற்பட்டது.

இதில், தூக்கி வீசப்பட்ட ரவி சம்பவ இடத்திலேயே இறந்தார். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட கார்த்தி, அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்தார். இதுகுறித்து, வெள்ளித்திருப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!