ஈரோடு டவுன் பகுதியில் நாளை மின்தடை

ஈரோடு டவுன் பகுதியில் நாளை மின்தடை
X

மின்தடை (பைல் படம்).

ஈரோடு டவுன் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நாளை (26ம் தேதி) மின்தடை செய்யப்படுகிறது.

ஈரோடு டவுன் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நாளை (26ம் தேதி) மின்தடை செய்யப்படுகிறது.

ஈரோடு துணை மின் நிலையத்தில் இருந்து செல்லும் திருநகர் காலனி, அசோகபுரம், கருங்கல்பாளையம் ஆகிய துணை மின் நிலையங்களில் நெடுஞ்சாலை துறை சார்பில் விஸ்தரிப்பு பணிகள் நாளை (26ம் தேதி) திங்கட்கிழமை நடக்கிறது. அதனால் கீழ்கண்ட பகுதிகளில் நாளை காலை 8 மணி முதல் மதியம் 1 மணி வரை மின்சார வினியோகம் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்தடை செய்யப்படும் பகுதிகள்:-

ஈரோடு பேருந்து நிலையம், திருவள்ளுவர் குடிசை, ஆர்.கே.வி.நகர், கிருஷ்ணம்பாளையம் ரோடு, திருநகர் காலனி, சத்தி ரோடு, வ.உ.சி. பூங்கா, சிந்தன்நகர், மேட்டூர் ரோடு, முனிசிபல் காலனி, கிருஷ்ணாசெட்டி வீதி, சி.என்.கல்லூரி, 16 அடி ரோடு, திரு.வி.க. வீதி, ஈ.வி.கே. சம்பத் ரோடு. மூலப்பட்டறை, ராஜாஜிபுரம், கே.என்.கே.ரோடு, கண்ணகிவீதி, கருங்கல்பாளையம், காவிரி ரோடு, சின்னமாரியம்மன் கோவில் வீதி, கொங்குநகர், சேலம் ரோடு, ராஜகோபால் தோட்டம் ஆகிய பகுதிகளில் மின்சாரம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!