ஈரோடு மாவட்டத்தில் நாளை (16ம் தேதி) மின்நிறுத்தப் பகுதிகள் அறிவிப்பு

ஈரோடு மாவட்டத்தில் நாளை (16ம் தேதி) மின்நிறுத்தப் பகுதிகள் அறிவிப்பு
X

பைல் படம்

ஈரோடு மாவட்டத்தில் நாளை (ஜூன் 16) வெள்ளிக்கிழமை மாதாந்திர பராமரிப்பு காரணமாக மின்நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஈரோடு மாவட்டத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) தளவாய்ப்பேட்டை (மின்தொடர்), புஞ்சைபுளியம்பட்டி, கோனேரிப்பட்டி (சித்தார் மின்தொடர்) துணை மின் நிலையங்களிலும் மற்றும் வெண்டிபாளையம் (நகராட்சி நகர்) மின்பாதையிலும் மாதப் பராமரிப்பு காரணமாக மின்சாரம் தடைப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தளவாய்பேட்டை துணை மின்நிலையம் - மின்தொடர் (காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை):-

மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:- பருவாச்சி, துருசாம்பாளையம், இரட்டைகரடு, பெரியவடமலைபாளையம், பச்சபாளி, புன்னம், கருக்குபாளையம், கூடல்நகர், சின்னவடமலைபாளையம், செங்கோடம்பாளையம், பாலம்பாளையம்.

புஞ்சைபுளியம்பட்டி துணை மின் நிலையம் (காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை):- .

மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:- புஞ்சைபுளியம்பட்டி, ஆம்போதி, ஆலந்தூர், காரப்பாடி, கணுவுக்கரை, நல்லூர், செல்லப்பம்பாளையம், ஆலம்பாளையம், ராமநாதபுரம், கள்ளிப்பாளையம், மாதம்பாளையம், பொன்னம்பாளையம், வெங்கநாயக்கன்பாளையம்.

கோனேரிப்பட்டி துணை மின் நிலையம் - சித்தார் மின் தொடர் (காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை):-

மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:- சித்தார், கேசரிமங்கலம், காடப்பநல்லூர், குட்டை முனியப்பன் கோவில், கல்பாவி, குறிச்சி, மாணிக்கம்பாளையம்.

வெண்டிபாளையம் துணை மின் நிலையம் - நகராட்சிநகர் மின்பாதை (காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை):-

மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:- நகராட்சிநகர், சோலார் புதூர், சாணார்மேடு, போக்குவரத்துநகர், லக்காபுரம்புதூர், லக்காபுரம், சின்னியம்பாளையம், கேட்டுபுதூர் ஆகிய பகுதிகளில் மின்சாரம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
குமாரபாளையத்தில் அத்துமீறிய சாயப்பட்டறைகள் மீது அதிரடி நடவடிக்கை - சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளின் தீவிர கண்காணிப்பு