ஈரோடு மாவட்டத்தில் நாளை (ஆகஸ்ட் 16) மின்நிறுத்த பகுதிகள் அறிவிப்பு

ஈரோடு மாவட்டத்தில் நாளை (ஆகஸ்ட் 16) மின்நிறுத்த பகுதிகள் அறிவிப்பு
X

மின்தடை (பைல் படம்).

ஈரோடு மாவட்டத்தில் நாளை (ஆகஸ்ட் 16) புதன்கிழமை மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து மின்வாரியம் அறிவித்துள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் நாளை (ஆகஸ்ட் 16) புதன்கிழமை மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து, மின்வாரியம் அறிவித்துள்ளது.

ஈரோடு மாவட்டத்தில், நாளை (ஆகஸ்ட் 16) புதன்கிழமை மின்தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து மின்வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நாளை மின்வாரியம் சார்பில், மின் கம்பங்கள், மின்மாற்றிகளில் உள்ள பழுது மற்றும் செடி கொடிகளை அகற்றும் பணி நடக்க இருக்கிறது.

மேலும், இதை சரிசெய்து பின்னர் சீரான மின் விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட இருக்கிறது. இதனால், நாளை பொதுமக்கள் மின் தேவை இருப்பின் மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆகையால், நாளை கீழ்கண்ட இந்தப் பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று மின்வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கவுந்தப்பாடி துணை மின் நிலையத்தில் இருந்து செல்லும் சிங்காநல்லூர் மின்பாதை (காலை 10 மணி முதல் மதியம் 3 மணி வரை):-

மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:- மாணிக்கவலசு, அணைபுதூர், பி.ஜி.வலசு, வேலாயிவலசு, கருக்கம்பாளையம், சிங்காநல்லூர் மற்றும் கொப்பையன் வலசு ஆகிய பகுதிகளில் மின்சாரம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!