ஈரோடு மாவட்டத்தில் நாளை (ஆகஸ்ட் 11) மின்நிறுத்த பகுதிகள் அறிவிப்பு

ஈரோடு மாவட்டத்தில் நாளை (ஆகஸ்ட் 11) மின்நிறுத்த பகுதிகள் அறிவிப்பு
X

மின்தடை (பைல் படம்).

ஈரோடு மாவட்டத்தில் நாளை (ஆகஸ்ட் 11) வெள்ளிக்கிழமை மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து, மின்வாரியம் அறிவித்துள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் நாளை (ஆகஸ்ட் 11) வெள்ளிக்கிழமை மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து, மின்வாரியம் அறிவித்துள்ளது.

ஈரோடு மாவட்டத்தில், நாளை (ஆகஸ்ட் 11) வெள்ளிக்கிழமை மின்தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து மின்வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நாளை மின்வாரியம் சார்பில், மின் கம்பங்கள், மின்மாற்றிகளில் உள்ள பழுது மற்றும் செடி கொடிகளை அகற்றும் பணி நடக்க இருக்கிறது. மேலும், இதை சரிசெய்து பின்னர் சீரான மின் விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட இருக்கிறது. இதனால், நாளை பொதுமக்கள் மின் தேவை இருப்பின் மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆகையால், நாளை கீழ்கண்ட இந்தப் பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று மின்வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கவுந்தப்பாடி துணை மின்நிலையத்தில் இருந்து செல்லும் நகர் மின்பாதை (காலை 10 மணி முதல் மதியம் 3 மணி வரை):-

மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:- கவுந்தபாடி, கவுந்தபாடிபுதூர், பி.மேட்டுபாளையம், ஆப்பக்கூடல், பெருந்தலையூர், மேவானிரோடு, செந்தாம்பாளையம், கவுண்டன்பாளையம், நெசவாளர்காலனி மற்றும் தர்மாபுரி.

கங்காபுரம் துணை மின் நிலையத்தில் இருந்து செல்லும் ஆட்டையம்பாளையம் மின்பாதை (காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை):-

மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:- சாமிகவுண்டன்பாளையம், குறிச்சான்வலசு, சில்லான்காடு, முள்ளம்பட்டி, பெருந்துறை to பவானி மெயின்ரோடு, நசியனூர் நடுவீதி, நமச்சிலான்மடை, கோட்டப்பெரியகாடு மற்றும் புதுகாலனி ஆகிய பகுதிகளில் மின்சாரம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது