பாஜக நிலைப்பாடு குறித்து விரைவில் அறிவிப்பு: மாநில பொதுச் செயலாளர் முருகானந்தம்

பாஜக நிலைப்பாடு குறித்து விரைவில் அறிவிப்பு: மாநில பொதுச் செயலாளர் முருகானந்தம்
X
நிருபர்களுக்கு பேட்டி அளித்த பாஜக மாநில பொதுச் செயலாளர் முருகானந்தம்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் குறித்த பாஜகவின் நிலைப்பாட்டை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விரைவில் அறிவிப்பார் என்று பாஜக மாநில பொதுச் செயலாளர் முருகானந்தம் தெரிவித்தார்.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் குறித்த பாஜகவின் நிலைப்பாட்டை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விரைவில் அறிவிப்பார் என்று பாஜக மாநில பொதுச் செயலாளர் முருகானந்தம் தெரிவித்தார்.

ஈரோட்டில் பாஜக மாவட்ட செயற்குழு கூட்டம் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது: பாஜக நாட்டில் 80 சதவீதத்துக்கு மேற்பட்ட மாநிலங்களில் ஆட்சியில் உள்ளது. பாஜக தமிழகத்திலும் வேகமாக வளர்ந்து வருகிறது. குறிப்பாக சிறுபான்மையினர் அதிகமாக பாரதிய ஜனதா கட்சியை நோக்கி வந்து கொண்டு இருக்கின்றனர் என்றும் அவர் பெருமிதத்துடன் தெரிவித்தார். இதற்கு உதாரணம் மொடக்குறிச்சி தொகுதியை பாஜக கைப்பற்றியதாகும். பாஜக தேர்தலை கருத்தில் கொண்டு செயல்படவில்லை. அடுத்த தலைமுறை மற்றும் தேச வளர்ச்சியை குறிக்கோளாக கொண்டு செயல்படுகிறது.

இன்றைய கூட்டம் கூட மாவட்டத்தின் முக்கிய பிரச்சினைகளை கண்டறிய அதை தீர்க்க நடக்கிறது. மாவட்ட தலைவர்கள் கூட்டத்தை அண்ணாமலை நடத்துகிறார். அதன் பிறகு தேர்தல் குறித்த நிலைப்பாட்டை அவர் அறிவிப்பார். இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்தில் மொடக்குறிச்சி எம்எல்ஏ சரஸ்வதி, மாவட்ட தலைவர் வேதானந்தம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
தினம் 1 ! வேகவைத்த முட்டை சாப்பிட்டால் உடம்புக்கு அவ்வளவு சத்துக்கள்  கிடைக்கும் ... வேறென்ன வேணும்...! | Egg benefits in tamil