அந்தியூர் வட்டத்தில் 1,518 பேருக்கு பட்டா வழங்கல்

அந்தியூர் வட்டத்தில் 1,518 பேருக்கு பட்டா வழங்கல்
X

Erode news-அந்தியூர் வட்டத்தைச் சேர்ந்த பொதுமக்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்களை சட்டமன்ற உறுப்பினர் வெங்கடாசலம் வழங்கினார். உடன், கோபி வருவாய் கோட்டாட்சியர் கண்ணப்பன் உள்ளார்.

Erode news- ஈரோடு மாவட்டம் அந்தியூர் வட்டத்தைச் சேர்ந்த 1,518 பேருக்கு சட்டமன்ற உறுப்பினர் வெங்கடாசலம் பட்டா வழங்கினார்.

Erode news, Erode news today- அந்தியூர் வட்டத்தைச் சேர்ந்த 1,518 பேருக்கு சட்டமன்ற உறுப்பினர் வெங்கடாசலம் பட்டா வழங்கினார்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் வட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு மாவட்ட வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கும் விழா தவிட்டுப்பாளையத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை (நேற்று) நடைபெற்றது. விழாவிற்கு, கோபி வருவாய் கோட்டாட்சியர் கண்ணப்பன் தலைமை வகித்தார். இந்த விழாவில், அந்தியூர் சட்டமன்ற உறுப்பினரும், மாற்றுத்திறனாளிகள் நல வாரிய மாநில உறுப்பினருமான வெங்கடாசலம் கலந்து கொண்டு 1,518 பேருக்கு பட்டா வழங்கினார்.


பின்னர், அவர் பேசுகையில், அந்தியூர் பேரூராட்சியில் உள்ள மந்தை மாரியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்த 21 குடும்பத்தினர் மூன்று தலைமுறைகளாக இலவச வீட்டு மனை பட்டா கேட்டு கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில், அவர்களுக்கு பட்டா கிடைக்க துறை ரீதியாக முயற்சி மேற்கொள்ளப்பட்டு தற்போது, 21 பயனாளர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டுள்ளது. அதேபோல், ரயத்து வாரி மனை நிறுத்த பட்டா 42 பயனாளிகளுக்கும், ஆதிதிராவிடர் நலத்துறையின் சார்பில் 808 பயனாளர்களுக்கு இ-பட்டாவும், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் 647 பயனாளிகளுக்கு இ- பட்டாவும் என மொத்தம் 1,518 பேருக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது என்றார்.

இவ்விழாவில், அந்தியூர் வட்டாட்சியர் கவியரசு, அந்தியூர் பேரூர் திமுக செயலாளர் காளிதாஸ், பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் பழனிச்சாமி, அந்தியூர் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் யாஸ்மின் தாஜ், கவிதா, கீதா சேகர், அம்மாபேட்டை வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் சரவணன், ஈரோடு வடக்கு மாவட்ட சிறுபான்மையின அணித் தலைவர் செபஸ்தியான், ஈரோடு வடக்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் ரமேஷ், சிபிஎம் வட்டாரச் செயலாளர் முருகேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ai solutions for small business