அந்தியூர் குருநாதசுவாமி கோயில் ஆடித்தேர் திருவிழா: சிறப்பு பஸ்கள் இயக்கம்
கடந்த ஆண்டு நடைபெற்ற திருவிழாவில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்ட கோப்பு படம்.
ஆடித்தேர் திருவிழாவையொட்டி, ஈரோடு மாவட்டம் அந்தியூர் குருநாதசுவாமி கோயிலுக்கு நாளை மறுதினம் (7ம் தேதி) முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் குருநாதசுவாமி கோயில் ஆடித்தேர் திருவிழா நாளை மறுதினம் 7ம் தேதி (புதன்கிழமை) தொடங்கி 10ம் தேதி (சனிக்கிழமை) வரை நடைபெறவுள்ளது. இவ்விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஈரோடு மண்டலம் சாா்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஈரோடு மண்டல பொதுமேலாளர் மோகன் குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ஈரோடு மாவட்டம் அந்தியூர் குருநாதசுவாமி கோயில் திருவிழாவினை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் ஈரோடு மண்டலத்தின் சார்பாக வருகின்ற 07.08.2024 முதல் 11.08.2024 வரை ஈரோடு, பவானி, குருவரெட்டியூர், கோபி, சத்தி, அம்மாபேட்டை, மேட்டூர், கவுந்தப்பாடி, பர்கூர், வெள்ளித்திருப்பூர், எண்ணமங்கலம் ஆகிய பகுதிகளுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறத. இவ்வசதியை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu