புதுப்பிக்கப்பட்ட மஞ்சள் நிற பேருந்தை துவக்கி வைத்த அந்தியூர் எம்எல்ஏ

புதுப்பிக்கப்பட்ட மஞ்சள் நிற பேருந்தை துவக்கி வைத்த அந்தியூர் எம்எல்ஏ
X

புதுப்பிக்கப்பட்ட மஞ்சள் நிற பேருந்தை அந்தியூர் எம்எல்ஏ வெங்கடாசலம் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

அந்தியூர் பேருந்து நிலையத்தில் புதுப்பிக்கப்பட்ட மஞ்சள் நிற அரசு பேருந்து சேவையை எம்எல்ஏ வெங்கடாசலம் துவக்கி வைத்தார்.

Erode Today News, Erode News - அந்தியூர் பேருந்து நிலையத்தில் புதுப்பிக்கப்பட்ட மஞ்சள் நிற அரசு பேருந்து சேவையை எம்எல்ஏ ஏ.ஜி.வெங்கடாசலம் இன்று (1ம் தேதி) கொடியசைத்து துவக்கி வைத்தார்.

ஈரோடு மாவட்டம் அந்தியூரில் இருந்து பர்கூர் மலை தாமரைக்கரை வழியாக கொங்காடை மலைக்கிராமத்திற்கு அரசு பேருந்து இயக்கப்பட்டு வந்தது. இப்பேருந்து நவீன வசதிகள் செய்யப்பட்டு, அவற்றுக்கு மஞ்சள் வர்ணம் பூசி புதுப்பிக்கப்பட்டது.


இந்நிலையில், அந்தியூர் பேருந்து நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் புதுப்பிக்கப்பட்ட பேருந்தை அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலம். கொடியசைத்து துவக்கி வைத்தார். பின்னர், பேருந்தில் பயணம் செய்தார்.

இந்த நிகழ்ச்சியில், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக அந்தியூர் கிளை மேலாளர் ரமேஷ், பேரூராட்சி துணைத் தலைவர் பழனிச்சாமி, பேரூராட்சி மன்ற உறுப்பினர் கவிதா, தொமுச மத்திய சங்க பொருளாளர் ரங்கநாதன், அந்தியூர் பேரூர் திமுக செயலாளர் காளிதாஸ், பொதுக்குழு உறுப்பினர் மாதேஸ்வரன், சிறுபான்மையினர் அணி மாவட்டத் தலைவர் செபஸ்தியான், அமைப்புசாரா ஓட்டுநர் அணி மாவட்ட அமைப்பாளர் நாகராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ai in future agriculture