அதிமுகவும், திமுகவும் தமிழகத்தை சீரழித்தது போதும்: பவானியில் அன்புமணி பேச்சு

திருப்பூர் தொகுதி பாஜக வேட்பாளர் முருகானந்தத்துக்கு ஆதரவாக பவானியில் நடந்த பிரசார கூட்டத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசினார்.
அதிமுகவும், திமுகவும் தமிழகத்தை சீரழித்தது போதும் என்று பவானியில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் பேசினார்.
திருப்பூர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் முருகானந்தத்தை ஆதரித்து, பவானியில் நடைபெற்ற பிரச்சார பொதுக் கூட்டத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசியதாவது:-
இந்த தேர்தல் மிக மிக முக்கியமான தேர்தல். காரணம் 57 ஆண்டுகள் அதிமுகவும், திமுகவும் மாறி மாறி ஆண்டு கொண்டிருக்கின்றன. இவர்கள் மாறி மாறி தமிழகத்தை ஆட்சி செய்து சீரழித்தது போதும்.
இவர்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அதற்காகத்தான் தேசிய ஜனநாயக கூட்டணியை உருவாக்கியுள்ளோம். நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று, வருகின்ற 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திராவிட கட்சிகள் இல்லாத கூட்டணி ஆட்சியை அமைப்போம். இரண்டு கட்சிகளிடமும் மாறி மாறி இட ஒதுக்கீடு தாருங்கள், சமூக நீதி தாருங்கள் என எவ்வளவு காலமாக கெஞ்சி கேட்பது போதும்.
இதுவரை இவர்களை நாம் தோள் கொடுத்து தூக்கி சென்றோம். இனி நமக்காக வாக்களிப்போம். இனி நாம் அதிகாரத்திற்கு வருவோம். ஆட்சியைப் பிடிப்போம். கையெழுத்து போடுவோம். இந்த இரண்டு கட்சிகளும் வேண்டாம். இரண்டு கட்சிகளும் மக்களுக்கு துரோகம் செய்து கொண்டிருக்கிறார்கள். அதனால் தான் இந்த முடிவு. எனவே தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் முருகானந்தத்தை வெற்றி பெற செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இப்பிரசாரக் கூட்டத்தில், திருப்பூர் நாடாளுமன்றத் தொகுதி பாஜக வேட்பாளர் முருகானந்தம், பாஜக வடக்கு மாவட்ட தலைவர் கலைவாணி, வடக்கு மாவட்ட பாமக செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, பவானி தொகுதி பாஜக பொறுப்பாளர் சித்தி விநாயகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu