ஈரோட்டில் தனியார் தொண்டு அமைப்பு முயற்சியால் வேருடன் பிடுங்கி நடப்பட்ட அரசமரம்!

ஈரோட்டில் தனியார் தொண்டு அமைப்பு முயற்சியால் வேருடன் பிடுங்கி நடப்பட்ட அரசமரம்!
X

வேருடன் பிடுங்கி வேறு இடத்தில் நட கிரேன் மூலம் எடுத்துச் செல்லப்பட்ட அரசமரம்.

ஈரோட்டில் கோடை வெயில் தாகத்தை உணர்ந்து பழமையான மரத்தை வேருடன் பிடுங்கி வேறு இடத்தில் நட்ட தனியார் தொண்டு அமைப்பின் சேவை மக்கள் மத்தியில் வரவேற்பு பெற்றுள்ளது.

ஈரோட்டில் கோடை வெயில் தாகத்தை உணர்ந்து பழமையான மரத்தை வேருடன் பிடுங்கி வேறு இடத்தில் நட்ட தனியார் தொண்டு அமைப்பின் சேவை மக்கள் மத்தியில் வரவேற்பு பெற்றுள்ளது.

தமிழகத்தில் கோடை வெயில் தாக்கத்தின் காரணமாக ஈரோடு மாவட்டத்தில் 107 டிகிரியை கடந்து வெப்ப அலை வீசி வருகிறது. இதனால் ஈரோடு மாவட்டத்தில் முன்பு இல்லாத வகையில் கோடை வெயிலால் மக்கள் அவதியடைந்து வருகின்றனர். இந்த வெயிலால் சுற்றுச்சூழல் பாதுகாக்க வேண்டும் என்ற உணர்வு மக்கள் மத்தியில் மேலோங்கி வருகிறது. இந்த சூழலில் திண்டல் பகுதியில் சாலையோரம் உள்ள 25 ஆண்டுகள் பழமையான அரச மரத்தினை சாலை விரிவாக்க பணிக்காக அப்புறப்படுத்த திட்டமிட்ட நிலையில் அந்த மரத்தினை வேரோடு அப்புறப்படுத்த தனியார் தொண்டு அமைப்பினர் திட்டமிட்டனர்.


இதனையடுத்து, கிரேன் மற்றும் ஜேசிபி இயந்திரத்தின் உதவியோடு 5 மணி நேர போராட்டத்திற்கு வேரோடு மரத்தினை எடுத்து 10 கி.மீ தொலைவில் உள்ள நசியனூர் பகுதியில் உள்ள நந்தவனத்தில் நட்டு மரத்திற்கு மறுவாழ்வு கொடுத்தனர். இதனால் வெயில் தன்மை உணர்ந்து சுற்றுச்சூழல் பாதுகாப்பை பாதுகாக்க வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த முயற்சியில் இறங்கியதாக தனியார் தொண்டு அமைப்பினர் தெரிவித்தனர். மேலும் இது போன்று மரத்தினை வேரோடு எடுத்து வைக்க மாவட்ட நிர்வாகம் போதுமான ஜேசிபி உபகரணங்கள் வழங்கினால் பழமையான மரங்கள் பாதுகாக்கப்படும் என கோரிக்கை விடுத்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!