அந்தியூர் அருகே வாக்களிக்க வரிசையில் நின்ற மூதாட்டி மயங்கி விழுந்ததால் பரபரப்பு

Erode news- தலைச்சுற்றல் ஏற்பட்டு மயங்கிய மூதாட்டி 108 ஆம்புலன்ஸ் மூலம் அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
Erode news, Erode news today- அந்தியூர் அருகே வாக்களிக்க வந்த மூதாட்டிக்கு தலைச்சுற்றல் ஏற்பட்டதையடுத்து 108 ஆம்புலன்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
நாடாளுமன்றத் தேர்தல் இன்று தமிழகத்தில் நடைபெற்று வருகிறது. இவ்வாறு இருக்க ஈரோடு மாவட்டத்தில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வாக்குப்பதிவு தொடங்கியது முதலே அரசியல் கட்சி தலைவர்கள், பொதுமக்கள் என பலரும் ஆர்வத்துடன் வந்து தங்களது வாக்கினை பதிவு செய்து வருகின்றனர்.
இந்நிலையில், திருப்பூர் நாடாளுமன்றத் தொகுதி உட்பட்ட அந்தியூர் சட்டமன்றத் தொகுதி பொய்யேரிக்கரையில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடி மையத்திற்கு வாக்களிக்க வந்த சமத்துவபுரம் பகுதியைச் சேர்ந்த துரையன் என்பவரது மனைவி லட்சுமி (வயது 70) என்ற மூதாட்டி வரிசையில் காத்திருந்தபோது தலைச்சுற்றல் காரணமாக திடீரென மயங்கி விழுந்தார்.
உடனடியாக அங்கு வந்த மருத்துவக் குழுவினர் மூதாட்டி லட்சுமியை 108 ஆம்புலன்ஸ் மூலம் அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வாக்குச்சாவடியில் மூதாட்டி லட்சுமி தனது ஜனநாயகக் கடமையாற்ற வரிசையில் காத்திருந்த போது தலைச்சுற்றி மயங்கி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu