சத்தியமங்கலம் அருகே மாடு மேய்க்க சென்ற முதியவர் யானை தாக்கி உயிரிழப்பு

சத்தியமங்கலம் அருகே மாடு மேய்க்க சென்ற முதியவர் யானை தாக்கி உயிரிழப்பு
X

யானை தாக்கி உயிரிழந்த மாதன்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே கடம்பூரில் மாடு மேய்க்க சென்ற முதியவர் யானை தாக்கி உயிரிழந்தார்.

Erode Today News, Erode Live Updates - சத்தியமங்கலம் அருகே கடம்பூரில் மாடு மேய்க்க சென்ற முதியவர் யானை தாக்கி உயிரிழந்தார்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள கடம்பூர் அருகே உள்ள கேர்மாளம் வனச்சரகத்துக்கு உட்பட்ட கோட்டமாளம் வைத்தியநாதன்புரம் எருது குட்டை தொட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மாதன் (வயது 60). இவர் நேற்று காலை வனப்பகுதியையொட்டி உள்ள தரிசு நிலத்தில் மாடு மேய்க்க சென்றார்.

இந்நிலையில், மாலையில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை யானை, அவரை தாக்கியது . இதில், அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர், இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கேர்மாளம் வனத்துறையினர் மற்றும் கடம்பூர் போலீசார் மாதனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக, சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இதுகுறித்து வனத்துறையினரும், போலீசாரும் விசாரணை நடத்தி வருகின்றனர். வனப்பகுதியை ஒட்டிய நிலத்தில் மாடு மேய்க்க சென்ற முதியவர் யானை தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!