கோபி அருகே தோட்டத்தில் கஞ்சா செடிகள் வளர்த்த சித்த வைத்தியர் மகனுடன் கைது

கோபி அருகே தோட்டத்தில் கஞ்சா செடிகள் வளர்த்த சித்த வைத்தியர் மகனுடன் கைது

Erode news- தோட்டத்தில் பயிரிட்டு இருந்த கஞ்சா செடிகளை போலீசார் பறிமுதல் செய்த போது எடுத்த படம்.

Erode news- ஈரோடு மாவட்டம் கோபி அருகே தோட்டத்தில் கஞ்சா செடி பயிரிட்ட சித்த வைத்தியர் மகனுடன் கைது செய்யப்பட்டார்.

Erode news, Erode news today- கோபி அருகே தோட்டத்தில் கஞ்சா செடி பயிரிட்ட சித்த வைத்தியர் மகனுடன் கைது செய்யப்பட்டார்.

ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள எலத்தூர் செட்டிபாளையம் பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் கஞ்சா செடி வளர்ப்பதாக கோபி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின்பேரில், போலீசார் சோதனை செய்தனர்.

அப்போது, அங்கு மூலிகை செடிகளுடன் கஞ்சா செடி பயிரிட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், தோட்டத்தில் சோளப்பயிர்களுக்கு நடுவே கஞ்சா செடிகள் வளர்த்து வந்தும் தெரியவந்தது.

அதனைத் தொடர்ந்து, போலீசார் தோட்ட உரிமையாளரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில், அவர் கோபி அடுத்த எ.செட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்த மாரப்பன் (வயது 80) என்பதும், சித்த வைத்தியராக இருந்து வருவதும் தெரிய வந்தது.

இதனையடுத்து, மாரப்பனை கைது செய்த போலீசார், இதற்கு உடந்தையாக இருந்ததாக அவருடைய மகன் கருப்புசாமியையும் (வயது 45) கைது செய்தனர். மேலும், தோட்டத்தில் இருந்த 11 கஞ்சா செடிகளை பறிமுதல் செய்து அழித்தனர்.

Tags

Next Story