ஈரோடு: தாளவாடி அருகே காட்டு யானை தாக்கி மூதாட்டி பரிதாப உயிரிழப்பு

ஈரோடு: தாளவாடி அருகே காட்டு யானை தாக்கி மூதாட்டி பரிதாப உயிரிழப்பு
X

காட்டு யானை தாக்கியதில் மூதாட்டி காளம்மா பரிதாபமாக உயிரிழந்தார்.

ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே காட்டு யானை தாக்கியதில் மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்தார்.

தாளவாடி அருகே காட்டு யானை தாக்கியதில் மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்தார்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் நடமாடுகின்றன. பகல் மற்றும் இரவு நேரங்களில் வனப்பகுதியை விட்டு வெளியேறும் காட்டு யானைகள், அருகாமையில் உள்ள கிராமங்களில் விவசாய தோட்டங்களை சேதப்படுத்துவது தொடர்கதையாக உள்ளது.

இந்நிலையில், இன்று காலை தாளவாடி அருகே உள்ள நெய்தாளபுரத்தில் தோட்டத்துக்குச் சென்ற காளம்மா (வயது 70) என்ற மூதாட்டியை, அவ்வழியாகச் சென்ற யானை தாக்கியதில் மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து, அப்பகுதி விவசாயிகள் ஊருக்குள் புகுந்து காளம்மாவை தாக்கிய யானையை காட்டுக்குள் விரட்டினர்.

பின்னர், இது குறித்து உடனே தாளவாடி வனத்துறைக்கும், ஆசனூர் போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் வனத்துறையினரும், போலீசாரும் சம்பவ இடத்துக்கு வந்து காளம்மாவின் உடலை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். பிறகு காளம்மாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

காட்டு யானை தாக்கி மூதாட்டி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!