பவானிசாகர் அருகே காவலுக்கு இருந்த வாலிபரை மிதித்துக் கொன்ற யானை

பவானிசாகர் அருகே காவலுக்கு இருந்த வாலிபரை மிதித்துக் கொன்ற யானை
X

Erode news- யானை தாக்கி வாலிபர் உயிரிழப்பு (மாதிரிப் படம்).

Erode news- ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அருகே பூசணிக்காய் பயிருக்கு காவலுக்கு இருந்த வாலிபரை யானை மிதித்துக் கொன்றது.

Erode news, Erode news today- பவானிசாகர் அருகே பூசணிக்காய் பயிருக்கு காவலுக்கு இருந்த வாலிபரை யானை மிதித்துக் கொன்றது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பவானிசாகர் வனச்சரகத்தில் சுஜில் குட்டை கிராமத்தில் முனியப்பன் கோவில் அருகில் நம்பியூரைச் சேர்ந்த வெங்கடாசலம் (வயது 25) என்ற வாலிபர் பூசணிக்காய் பயிருக்கு இரவு நேர காவல் பணியில் ஈடுபட்டிருந்தார்.

இந்நிலையில், நள்ளிரவில் வனப்பகுதியை விட்டு வெளியேறிய காட்டு யானை ஒன்று பூசணிக்காய் பயிரிட்டுள்ள தோட்டத்திற்குள் புகுந்தது. இதனைக் கண்ட வெங்கடாசலம் யானையை விரட்ட முயன்றார். ஆனால், காட்டு யானை வெங்கடாசலத்தை காலால் மிதித்தது. இதில், வெங்கடாசலம் உடல் நசுங்கி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனையடுத்து, சத்தம் கேட்டு அருகில் தோட்டத்தில் இருந்தவர்கள் எழுந்து வந்து பார்த்தபோது வெங்கடாசலம் உயிரிழந்து கிடப்பதையும், தோட்டத்தில் யானை நிற்பதையும் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். பின்னர், தீபந்தத்தை காட்டி யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர்.

இதனைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பவானிசாகர் வனத்துறையினர் மற்றும் போலீசார் வெங்கடாசலத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுதொடர்பாக விசாரிக்கின்றனர்.

Tags

Next Story
விரதத்துடன் தலைவலியும் வந்தால் என்ன செய்யலாம்? தீர்வுகள் இதோ!