சத்தியமங்கலம் அருகே சோளக்காட்டிற்கு காவலுக்கு இருந்த விவசாயியை மிதித்துக் கொன்ற யானை

சத்தியமங்கலம் அருகே சோளக்காட்டிற்கு காவலுக்கு இருந்த விவசாயியை மிதித்துக் கொன்ற யானை
X

யானை மிதித்ததில் மாறன் இறந்து கிடப்பதை படத்தில் காணலாம்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே சோளக்காட்டிற்கு காவலுக்கு இருந்த விவசாயியை காட்டு யானை மிதித்துக் கொன்றது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே சோளக்காட்டிற்கு காவலுக்கு இருந்த விவசாயியை காட்டு யானை மிதித்துக் கொன்றது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த கடம்பூர் அருகே உள்ள குத்தியாலத்தூர், அணைக்கரை, பைரமரத்தொட்டி பகுதியைச் சேர்ந்தவர் மாறன் (வயது 55). விவசாயியான இவருக்கு அதே பகுதியில் அடர்ந்த வனப்பகுதியை ஒட்டி 5 ஏக்கர் நிலம் உள்ளது.

இதில், தற்போது மக்காச்சோளம் பயிரிட்டுள்ள நிலையில், தோட்டத்தில் இரவு நேர காவலில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று (நவ.17) இரவு வழக்கம் போல் மாறன் தனது தோட்டத்தில் இரவு நேர காவலுக்கு சென்றார்.

அப்போது, தோட்டத்துக்குள் ஒற்றை யானை புகுந்த, மாறனை திடீரென துரத்த தொடங்கியது. இதனால் அதிர்ச்சி அடைந்த மாறன் தப்பி ஓட முயன்றார். ஆனால், யானை அவரை தாக்கி மிதித்தது.

இதில், மாறன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதனையடுத்து, யானை சத்தத்தை கேட்டு அருகிலுள்ள தோட்டத்தில் காவலில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்தனர். அப்போது மாறன் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

பின்னர், இதுகுறித்து வனத்துறையினர் மற்றும் கடம்பூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த கடம்பூர் போலீசார் மற்றும் வனத்துறையினர் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!