கோபி அருகே வழிதவறி ஊருக்குள் புகுந்த யானை: காட்டுக்குள் விரட்ட வனத்துறை முயற்சி

கோபி அருகே வழிதவறி ஊருக்குள் புகுந்த யானை: காட்டுக்குள் விரட்ட வனத்துறை முயற்சி
X

Erode news- வனப்பகுதியில் இருந்து வழிதவறி வந்த யானை கோபிசெட்டிபாளையம் - சத்தியமங்கலம் சாலையை கடந்த போது எடுத்த படம்.

Erode news- ஈரோடு மாவட்டம் கோபி அருகே வனப்பகுதியில் இருந்து வழிதவறி வந்து புதருக்குள் மறைந்துள்ள ஒற்றை காட்டு யானையை 50க்கும் மேற்பட்ட வனத்துறை வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Erode news, Erode news today- கோபி அருகே வனப்பகுதியில் இருந்து வழிதவறி வந்து புதருக்குள் மறைந்துள்ள ஒற்றை காட்டு யானையை 50க்கும் மேற்பட்ட வனத்துறை வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள டி.என்.பாளையம் வனப்பகுதியில் இருந்து இன்று (3ம் தேதி) அதிகாலை வெளியேறிய ஆண் யானை ஒன்று வழிதவறி கோபிசெட்டிபாளையம் - சத்தியமங்கலம் சாலையில் உள்ள தனியார் பள்ளியின் எதிரே இருந்த புதருக்குள் மறைந்து நின்றது.

இந்நிலையில், யானையை நேரில் பார்த்த அப்பகுதி மக்கள் காவல்துறை மற்றும் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், வனத்துறையினர் அங்கு விரைந்தனர். இதனையடுத்து, சம்பவ இடத்தில் டி.என்.பாளையம் வனச்சரகர் மாரிமுத்து தலைமையில் 20க்கும் மேற்பட்ட வனக்காவலர்கள் யானை இருக்குமிடத்தை சுற்றி பாதுகாப்பினை ஏற்படுத்தினர். பின்னர், அங்கிருந்த பொதுமக்களை வெளியேற்றினர்.

அதனைத் தொடர்ந்து, வனத்துறையினர் யானையை பாதுகாப்பாக வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர். கிட்டத்தட்ட 3 மணி நேரத்திற்கு மேலாக யானை போக்கு காட்டி வரும் நிலையில், தொடர்ந்து, யானையை அடர்ந்த வனப்பகுதியில் விரட்டும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், ஒலிபெருக்கி மூலம் பாதுகாப்பாக இருக்க வேண்டுமென வலியுறுத்தினர். இதனால், அங்கு பரபரப்பாக சூழ்நிலை நிலவி வருகிறது.

Tags

Next Story
ஆள் இல்லாமலே இயங்கும் விமானம்,அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு