கோபி அருகே தோட்டத்தில் புகுந்து யானை அட்டகாசம்: 100 வாழை மரங்கள் சேதம்

கோபி அருகே தோட்டத்தில் புகுந்து யானை அட்டகாசம்: 100 வாழை மரங்கள் சேதம்
X

Erode news- சேதமடைந்த வாழை மரங்களுடன் விவசாயி நாகராஜ்.

Erode news- ஈரோடு மாவட்டம் கோபி அடுத்த டி.என்.பாளையத்தில் தோட்டத்தில் புகுந்த காட்டு யானை 100 வாழை மரங்களை மிதித்து அட்டகாசத்தில் ஈடுபட்டது.

Erode news, Erode news today- கோபி அடுத்த டி.என்.பாளையத்தில் தோட்டத்தில் புகுந்த காட்டு யானை 100 வாழை மரங்களை மிதித்து சேதம் செய்து அட்டகாசத்தில் ஈடுபட்டது.

ஈரோடு மாவட்டம் கோபி அடுத்த டி.என்.பாளையம் அருகே உள்ள கள்ளிப்பட்டி கணக்கம்பாளையம் பகவதி நகர் புதுத்தோட்டத்தை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 63). விவசாயி. இவருக்கு சொந்தமான 4 ஏக்கர் பரப்பளவிலான தோட்டம் வனப்பகுதியையொட்டி உள்ளது. இங்கு, அவர் ஒன்றரை ஏக்கரில் 1,500 வாழை மரங்கள் சாகுபடி செய்துள்ளார்.

இந்த நிலையில் அந்தியூர் வனப்பகுதியில் இருந்து நேற்றுமுன்தினம் இரவு வெளியேறிய காட்டு யானை இவருடைய தோட்டத்துக்குள் புகுந்து அட்டகாசத்தில் ஈடுபட்டது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சேதப்படுத்தியது. பின்னர் யானை தானாகவே வனப்பகுதிக்குள் சென்றது. நேற்று காலை நாகராஜ் தோட்டத்துக்கு சென்று பார்த்தார் அப்போது வாழை மரங்கள் சேதப்படுத்தப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

மேலும், வனவிலங்குகள் வனப்பகுதியில் இருந்து வெளியேறாதவாறு வனப்பகுதியை சுற்றி அகழி அமைக்க வேண்டும் என்று விவசாயி நாகராஜ் கோரிக்கை விடுத்துள்ளார்.

Tags

Next Story
ai solutions for small business