ஈரோடு மாவட்டத்தில் நேற்று 45.10 மி.மீ மழை பதிவு: சராசரியாக 2.65 மி.மீ பதிவு

ஈரோடு மாவட்டத்தில் நேற்று 45.10 மி.மீ மழை பதிவு: சராசரியாக 2.65 மி.மீ பதிவு
X

மழை (மாதிரிப் படம்).

ஈரோடு மாவட்டத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) சராசரியாக 2.65 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) சராசரியாக 2.65 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் நடப்பாண்டு ஏப்ரல் மாதத்தில் சுட்டெரித்த வெயிலுக்கு இணையாக, தற்போது மாவட்டம் முழுவதும் பரவலாக கோடை மழை பெய்து வருகிறது. மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக கோடை மழை பெய்து, கோடை வெயிலை விரட்டியுள்ளது.

அக்னி நட்சத்திர வெயில் வருகிற 28ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. மேலும், இரண்டு அல்லது மூன்று மழை பெய்தால், கோடைக்கு குட்பை சொல்லிவிடலாம் என்று மக்கள் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில், நேற்று (மே.21) செவ்வாய்க்கிழமை காலை காலை துவங்கி, இன்று (மே.22) புதன்கிழமை காலை வரையில் 45.10 மி.மீ அளவுக்கு மழை பதிவாகியுள்ளது.

அதன்படி, மொடக்குறிச்சி 2.0 மி.மீ, கொடுமுடி 10.20 மி.மீ, பவானி 1.20 மி.மீ, அம்மாபேட்டை 19.80 மி.மீ, வரட்டுப்பள்ளம் 1.40 மி.மீ, தாளவாடி 10.50 மி.மீ அளவுக்கு மழை பெய்தது. மாவட்டத்தில் மொத்தமாக 45.10 மி.மீ ஆகவும், சராசரியாக 2.65 மி.மீ ஆகவும் மழைப்பொழிவு பதிவாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!