ஈரோடு இடைத்தேர்தலில் அமமுக வேட்பாளர் சிவபிரசாந்த் வேட்புமனு தாக்கல்
வேட்புமனு தாக்கல் செய்த அமமுக வேட்பாளர் சிவபிரசாந்த்.
ஈரோடு கிழக்குத் தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினரான திருமகன் ஈவேரா கடந்த ஜனவரி 4-ஆம் தேதி திடீர் மாரடைப்பால் உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதி காலியாக அறிவிக்கப்பட்டு, வரும் பிப்ரவரி 27ம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்த இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அமமுக சார்பில் சிவபிரசாத், தேமுதிக சார்பில் ஆனந்த், நாம் தமிழர் சார்பில் மேனகா ஆகியோர் வேட்பளார்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
அதிமுக இபிஎஸ் அணி சார்பில் தென்னரசு வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். ஓபிஎஸ் அணி சார்பில் செந்தில் முருகன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். ஈரோடு இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதனைத்தொடர்ந்து, இன்று 4-வது நாளாக வேட்புமனுக்கள் பெறப்பட்டு வரும் நிலையில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சிவபிரசாந்த், ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் சிவகுமாரிடம் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார. மேலும், இன்று வெள்ளிக்கிழமை என்பதாலும், நல்ல நாள் என கருதப்படுவதாலும் இன்று வேட்பாளார்கள் தங்களது வேட்பு மனுவை தாக்கல் செய்ய படையெடுத்து வந்தது குறிப்பிடத்தக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu