ஈரோடு மாவட்டத்தில் இதுவரை இவ்ளோ கோடி பணம் பறிமுதலா..?

ஈரோடு மாவட்டத்தில் இதுவரை இவ்ளோ கோடி பணம் பறிமுதலா..?
X

பைல் படம்.

.தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில் ஈரோடு மாவட்டத்தில் இதுவரை எத்தனை கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது தெரியுமா?

தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில் ஈரோடு மாவட்டத்தில் இதுவரை ரூ.2.39 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் நாடாளுமன்றத் தோ்தல் நடத்தை விதிகளை செயல்படுத்தும் விதமாகவும், மீறுவோா் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டும் ஒரு சட்டமன்ற தொகுதிக்கு 3 பறக்கும் படையினர் வீதம் 24 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதில், ஈரோடு கிழக்குத் தொகுதிக்கு மட்டும் கூடுதலாக ஒரு பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. இதன்படி மொத்தம் 25 பறக்கும்படை அமைக்கப்பட்டு மாவட்டம் முழுவதும் தீவிரமாக வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன்படி, இன்று வரை ஈரோடு கிழக்கு தொகுதியில் ரூ.66 லட்சத்து 45 ஆயிரத்து 797ம், ஈரோடு மேற்கு தொகுதியில் ரூ.58 லட்சத்து 11 ஆயிரத்து 390ம், மொடக்குறிச்சி தொகுதியில் ரூ.6 லட்சத்து 92 ஆயிரத்து 670ம், பெருந்துறை தொகுதியில் ரூ.19 லட்சத்து 39 ஆயிரத்து 980ம், பவானி தொகுதியில் ரூ.16 லட்சத்து 37 ஆயிரத்து 100ம், அந்தியூர் தொகுதியில் ரூ.4 லட்சத்து 84 ஆயிரத்து 850ம், கோபி தொகுதியில் ரூ.10 லட்சத்து 65 ஆயிரத்து 650ம், பவானிசாகர் தொகுதியில் ரூ.56 லட்சத்து 71 ஆயிரத்து 258ம் என 8 சட்டமன்ற தொகுதிகளில் தற்போது வரை மொத்தம் ரூ.2 கோடியே 39 லட்சத்து 48 ஆயிரத்து 695 பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இதில், உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டதால் ரூ.1 கோடியே 56 லட்சத்து 5 ஆயிரத்து 695 சம்பந்தப்பட்டவர்களுக்கு திருப்பி வழங்கப்பட்டது. மீதமுள்ள ரூ.83 லட்சத்து 43 ஆயிரம் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!