ஈரோடு மாவட்டத்தில் இதுவரை ரூ.2.25 கோடி பறிமுதல்..!

ஈரோடு மாவட்டத்தில் இதுவரை ரூ.2.25 கோடி பறிமுதல்..!
X

பைல் படம்.

தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில் ஈரோடு மாவட்டத்தில் இதுவரை ரூ.2.25 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில் ஈரோடு மாவட்டத்தில் இதுவரை ரூ.2.25 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் நாடாளுமன்றத் தோ்தல் நடத்தை விதிகளை செயல்படுத்தும் விதமாகவும், மீறுவோா் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டும் ஒரு சட்டமன்ற தொகுதிக்கு 3 பறக்கும் படையினர் வீதம் 24 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதில், ஈரோடு கிழக்குத் தொகுதிக்கு மட்டும் கூடுதலாக ஒரு பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. இதன்படி மொத்தம் 25 பறக்கும்படை அமைக்கப்பட்டு மாவட்டம் முழுவதும் தீவிரமாக வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளிலும் இன்று காலை வரை உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.2 கோடியே 25 லட்சத்து 8 ஆயிரத்து 945 பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். இதில் ரூ.1 கோடியே 23 லட்சத்து 41 ஆயிரத்துக்கு, 55 உரிய ஆவணங்கள் காட்டியதால் சம்பந்தப்பட்டவர்களிடம் திருப்பி ஒப்படைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள ரூ.1 கோடியே 1 லட்சத்து 67 ஆயிரத்து 890 ரூபாய் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags

Next Story
ai marketing future