கோபிசெட்டிபாளையத்தில் இந்து முன்னணி சார்பில் ஆம்புலன்ஸ் சேவை தொடக்கம்

கோபிசெட்டிபாளையத்தில் இந்து முன்னணி சார்பில் ஆம்புலன்ஸ் சேவை தொடக்கம்

கோபிசெட்டிபாளையம் பேருந்து நிலையத்தில் இந்து முன்னணி சார்பில், ஆம்புலன்ஸ் சேவை காவிக்கொடி அசைத்து தொடங்கி வைக்கப்பட்டது.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் இந்து முன்னணி சார்பில் ஆம்புலன்ஸ் சேவை இன்று (26ம் தேதி) தொடங்கி வைக்கப்பட்டது.

Erode Today News, Erode News - கோபிசெட்டிபாளையத்தில் இந்து முன்னணி சார்பில் ஆம்புலன்ஸ் சேவை இன்று (26ம் தேதி) தொடங்கி வைக்கப்பட்டது.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் பேருந்து நிலையத்தில், கோபி நகர இந்து முன்னணி சார்பில், கோபி நகர பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் குறைந்த கட்டணத்தில் ஆம்புலன்ஸ் சேவை வழங்கப்படுவதற்கான தொடக்க நிகழ்ச்சி இன்று (26ம் தேதி) நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு, இந்து முன்னணி அமைப்பின் ஈரோடு மேற்கு மாவட்ட துணைத்தலைவர் கிருஷ்ணசாமி தலைமை வகித்தார். மாவட்ட செய்தி தொடர்பாளர் பிரபாகரன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் முருகேசன், நகர தலைவர் விமல்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில், மருத்துவர்கள் ரவீந்திரன் மற்றும் ராஜா ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு ஆம்புலன்ஸ் சேவையினை காவிக்கொடி அசைத்து துவக்கி வைத்தனர்.

இந்நிகழ்ச்சியில் கோபி நகர பொதுச்செயலாளர் மதன்குமார், நகர பொறுப்பாளர்கள் பால்ராஜ், ஆனந்த், பா.ஜ.க. அமைப்புசாரா தொழிலாளர் பிரிவு மாவட்ட தலைவர் மகாலிங்கம் ராமசாமி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
Similar Posts
ஜம்பை தனியார் கல்லூரியில் காசநோய் ஒழிப்பு, புகையிலை எதிர்ப்பு விழிப்புணர்வு முகாம்
ஈரோட்டில் தென்னக ரயில்வே ஓய்வூதியர் நலச்சங்க 9வது பொது மகா சபைக் கூட்டம்
அந்தியூர் அருகே பர்கூரில் 1.2 டன் புகையிலை பொருட்கள் தீ வைத்து அழிப்பு
தாளவாடியில் பறிமுதல் செய்த பணத்தை பிரித்துக் கொண்ட 2 போலீசார் ஆயுதப்படைக்கு மாற்றம்
செந்தில்பாலாஜிக்கு ஜாமீன்: அந்தியூரில் திமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
நம்பியூர் ஒன்றியத்தில் ரூ.4.08 கோடி வளர்ச்சி திட்டப் பணிகளை ஆட்சியர் ஆய்வு
தனித்துவ அடையாள அட்டையுடன் ஒரே நாடு ஒரே மாணவர் திட்டம்: மோடி அறிவிப்பு
கோபிசெட்டிபாளையத்தில் இந்து முன்னணி சார்பில் ஆம்புலன்ஸ் சேவை தொடக்கம்
பட்டா பதிவிறக்கம் செய்வதில் குளறுபடி: ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் காங்கிரசார் மனு
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்: பவானி  நெடுஞ்சாலைத்துறையினர்
ஈரோடு மாவட்டத்தில் நாளை (செப்.27) மின்தடை ஏற்படும் பகுதிகள்
ராணுவ சிறைக்காவலில் பாகிஸ்தான் முன்னாள் ஐஎஸ்ஐ தலைவர் ஃபைஸ் ஹமீத்
ஜூனியர் என்.டி.ஆரின் தேவ்ரா படம் 2 நாள் முன்பதிவில் அள்ளிய வசூல்