ஈரோடு மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபடும் 988 போலீசாருக்கு வாக்குச்சாவடி மையங்கள் ஒதுக்கீடு

Erode news- போலீசாருக்கான வாக்குச்சாவடி அமைவிடங்கள் ஒதுக்கீடு செய்யும் பணியினை இந்திய தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தின் மூலம் கணினி சுழற்சி முறையில் மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான ராஜ கோபால் சுன்கரா துவக்கி வைத்தார்.
Erode news, Erode news today- ஈரோடு மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபடும் 988 போலீசாருக்கான வாக்குச்சாவடி மையம் ஒதுக்கீடு செய்யும் பணி இணையதளத்தின் மூலம் சுழற்சி முறையில் தொடங்கி வைக்கப்பட்டது.
ஈரோடு மாவட்ட சட்டமன்ற தொகுதிகளில் உள்ள வாக்குப்பதிவு மையங்களில் காவல் பணியில் ஈடுபடும் போலீசாருக்கான வாக்குச்சாவடி அமைவிடங்கள் ஒதுக்கீடு செய்யும் பணியினை இந்திய தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தின் மூலம் கணினி சுழற்சி முறையில் ஒதுக்கீடு செய்யும் பணி ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. ஈரோடு மாவட்ட தேர்தல் பார்வையாளர்கள் ராஜீவ் ரஞ்சன் மீனா (பொது), திரு.ராம் கிருஷ்ணா ஸ்வரன்கர் (காவல்) ஆகியோர் முன்னிலையில், ஈரோடு மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான ராஜ கோபால் சுன்கரா துவக்கி வைத்தார்.
இந்திய தேர்தல் ஆணையத்தால், நாடாளுமன்ற தேர்தல் 2024 அறிவிக்கப்பட்டு, அதன்படி, ஈரோடு மாவட்டத்தில் வருகிற 19ம் தேதி நாடாளுமன்றப் பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, பெருந்துறை, பவானி, அந்தியூர், கோபிசெட்டிபாளையம், பவானிசாகர் உள்ளிட்ட 8 தொகுதிகளில் வாக்குப்பதிவிற்காக 2222 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் 53 வாக்குச்சாவடி அமைவிடங்களும், ஈரோடு மேற்கு சட்டமன்ற தொகுதியில் 102 வாக்குச்சாவடி அமைவிடங்களும், மொடக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் 146 வாக்குச்சாவடி அமைவிடங்களும், பெருந்துறை சட்டமன்ற தொகுதியில் 153 வாக்குச்சாவடி அமைவிடங்களும், பவானி சட்டமன்ற தொகுதியில் 123 வாக்குச்சாவடி அமைவிடங்களும், அந்தியூர் சட்டமன்ற தொகுதியில் 123 வாக்குச்சாவடி அமைவிடங்களும், கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதியில் 129 வாக்குச்சாவடி அமைவிடங்களும், பவானிசாகர் (தனி) சட்டமன்ற தொகுதியில் 127 வாக்குச்சாவடி அமைவிடங்களும் என மொத்தம் 956 வாக்குச்சாவடி அமைவிடங்கள் உள்ளன.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் 77 காவலர்களும், ஈரோடு மேற்கு சட்டமன்ற தொகுதியில் 121 காவலர்களும், மொடக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் 151 காவலர்களும், பெருந்துறை சட்டமன்ற தொகுதியில் 95 காவலர்களும், பவானி சட்டமன்ற தொகுதியில் 134 காவலர்களும், அந்தியூர் சட்டமன்ற தொகுதியில் 129 காவலர்களும், கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதியில் 140 காவலர்களும், பவானிசாகர் (தனி) சட்டமன்ற தொகுதியில் 141 காவலர்களும் என 988 காவலர்கள், தலைமை காவலர்கள், சிறப்பு காவல் ஆய்வாளர்கள் காவல் பணியில் ஈடுபடவுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து, 988 காவலர்களுக்கும் அனைத்து சட்டமன்ற தொகுதிகளில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் காவல் பணியில் ஈடுபடுவதற்கு வாக்குச்சாவடி அமைவிடங்கள் ஒதுக்கீடு செய்யும் பணியினை இந்திய தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தின் மூலம் கணினி சுழற்சி முறையில் துவக்கி வைக்கப்பட்டது. இதில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர், மாவட்ட வருவாய் அலுவலர் சாந்த குமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) ரகுநாதன், வட்டாட்சியர் (தேர்தல்) சிவசங்கர், கணினி நிரலாளர் வெங்கடேஷ் உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu