கொங்கு கல்லூரியில் போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி

கொங்கு கல்லூரியில் போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி
X

கொங்கு கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற மது, போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு கலந்துரையாடல் நிகழ்ச்சி.

ஈரோடு கொங்கு கலை அறிவியல் கல்லூரியில் மது, போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது.

ஈரோடு கொங்கு கலை அறிவியல் கல்லூரியில் மது, போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது.

ஈரோடு கொங்கு கலை அறிவியல் கல்லூரியின் இளைஞர் செஞ்சிலுவைச் சங்கம், போதைப்பொருள் தடுப்புக் குழு மற்றும் ஈரோடு யங் இந்தியன்ஸ் அமைப்பு சார்பில் மது, போதைப்பொருள் பயன்பாட்டினை தடுப்பு விழிப்புணர்வு மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சி தொடக்கத்தில் யங் இந்தியன்ஸ் அமைப்பின் தலைவர் எம்.சரவணன் வாழ்த்துரை வழங்கினார். தொடர்ந்து, கல்லூரியின் இளநிலை வணிகவியல் வங்கி மற்றும் காப்பீட்டுத் துறையின் துறைத்தலைவர் கே.எம்.குமரகுரு தலைமையுரை ஆற்றினார்.


அதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு யங் இந்தியன்ஸ் சுகாதார அமைப்பின் தலைமைப் பொறுப்பாளர் கோமதி ஸ்ரீகல்யாண், யங் இந்தியன்ஸ் தலைவர் ஸ்ரீமதி, சுகாதாரத் தலைவர் டாக்டர். சரண்யா, யங் இந்தியன்ஸ் துணைத் தலைவர் யாதவி யோகேஷ் ஆகியோர் தலைமையில் கலந்துரையாடல் நிகழ்ச்சி தொடங்கியது.

யங் இந்தியன்ஸ் அமைப்பின் சுகாதாரத் தலைவர் டாக்டர்.சரண்யா தொடங்கி வைத்தார். தொடர்ந்து, யங் இந்தியன்ஸ் அமைப்பின் சுகாதாரத் துணைத் தலைவர் குருமூர்த்தி பெரியசாமி, யங் இந்தியன்ஸ் அமைப்பின் குழு உறுப்பினர்கள் குறித்து அறிமுகவுரை ஆற்றினார்.


பின்னர், யங் இந்தியன்ஸ் அமைப்பின் குழு உறுப்பினர்கள் டாக்டர். கவிதாசுப்ரமணியம், வழக்கறிஞர் எம்.முருகானந்தம், டாக்டர். ஜெயசந்திரன், டாக்டர்.கார்த்திக் நற்றமிழரசு, டாக்டர். சோபனா மற்றும் சமூகப்பணித்துறை இரண்டாமாண்டு மாணவி எஸ்.ஜெயமோனிஷா ஆகியோர் புகையிலை, மதுபானம் மற்றும் போதைப்பொருள் பயன்பாடு எப்படி ஆபத்தானது மற்றும் அதற்கு அடிமையானவர்களின் வாழ்க்கையை அவை எவ்வாறெல்லாம் பாதிக்கின்றன என்பது குறித்து கலந்துரையாடினர்.

தொடர்ந்து, சமூகத்தில் போதைப்பொருள் பயன்பாட்டினால் ஏற்படும் தீய விளைவுகளைப் புரிந்துகொள்வது குறித்தும், புகையிலை, மது மற்றும் போதைப்பொருள் பழக்கத்திற்கு அடிமையாவதினைத் தடுப்பதற்கான வழிகளை ஆராய்வதற்குமான வழிமுறைகள் பற்றியும் விளக்கிக் கூறினர். மேலும், இதுகுறித்து மாணவ, மாணவிகளோடு கலந்துரையாடி அவர்களின் வினாக்களுக்கு விடையளித்தனர்.


இந்நிகழ்ச்சியின் முடிவில் யங் இந்தியன் அமைப்பின் துணைத் தலைவர் யாதவி யோகேஷ் நன்றியுரை ஆற்றினார். இந்நிகழ்வில் பல்வேறு துறைகளில் பயிலும் 185க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பயன் பெற்றனர். இந்நிகழ்விற்கு கல்லூரியின் தாளாளர் பி.டி. தங்கவேல் தலைமை தாங்கினார். கல்லூரியின் முதல்வர் ஹெச்.வாசுதேவன் முன்னிலை வகித்தார்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைக் கல்லூரியின் இளைஞர் செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் போதைப்பொருள் தடுப்புக் குழு உறுப்பினர்கள் செய்திருந்தனர்.

Tags

Next Story
வாழ்க்கையே வெறுத்துப்போய் நிற்கிறதா? ஒரு நிமிடம் இதை படிங்க..! | How To Stop Anxiety Instantly In Tamil