ஈரோட்டில் சர்வதேச இளைஞர் தினத்தை முன்னிட்டு எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு மாரத்தான்

Erode news- கல்லூரி மாணவ, மாணவியர்கள் பங்கேற்ற, மாவட்ட அளவிலான மாரத்தான் போட்டியினை ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா கொடியசைத்து துவக்கி வைத்த போது எடுத்த படம்.
Erode news, Erode news today- ஈரோட்டில் சர்வதேச இளைஞர் தினத்தை முன்னிட்டு எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டப் போட்டி இன்று (11ம் தேதி) நடைபெற்றது.
கடந்த ஆகஸ்ட் 12ம் தேதி, சர்வதேச இளைஞர் தினம் 2024ஐ முன்னிட்டு, ஈரோடு மாவட்ட எய்ட்ஸ் எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகின் சார்பில், பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
அதன் தொடர்ச்சியாக, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், கல்லூரி மாணவ, மாணவியர்கள் பங்கேற்ற மாவட்ட அளவிலான மாரத்தான் போட்டியினை மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இந்த மாரத்தான் போட்டியானது மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தொடங்கி திண்டல் அரசு மேல்நிலைப்பள்ளி வரை சென்றடைந்தது. இந்த மாரத்தான் போட்டியில், 16க்கும் மேற்பட்ட கல்லூரிகளை சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.
இப்போட்டியில் வெற்றி பெறும் மாணவ, மாணவியர்களுக்கு என இருபாலருக்கும் தனித்தனியே, முதல் பரிசாக ரூ.10 ஆயிரம், இரண்டாம் பரிசாக ரூ.7 ஆயிரம், மூன்றாம் பரிசாக ரூ.5 ஆயிரம் வழங்கப்படவுள்ளது.
முன்னதாக, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகின் சார்பில், எய்ட்ஸ் தடுப்பு குறித்த விழிப்புணர்வு ஒட்டு வில்லைகளை வாகனங்களில் ஒட்டி மாவட்ட ஆட்சியர் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
இந்நிகழ்வின் போது, இணை இயக்குநர் (நலப்பணிகள்) அம்பிகா, துணை இயக்குநர்( சுகாதாரப் பணிகள்) சோமசுந்தரம், திட்ட மேலாளர் (மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு) துரைசாமி உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu