பர்கூர் மலைப்பகுதி வனவிலங்கு சரணாலய அறிவிப்புக்கு எதிராக அதிமுக ஆர்ப்பாட்டம்

பர்கூர் மலைப்பகுதி வனவிலங்கு சரணாலய அறிவிப்புக்கு எதிராக அதிமுக ஆர்ப்பாட்டம்
X

பர்கூர் தாமரைக்கரையில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

அந்தியூர் தொகுதி, பர்கூர் மலைப்பகுதியை வனவிலங்கு சரணாலயமாக அறிவித்துள்ள திமுக அரசைக் கண்டித்து, அதிமுக சார்பில், மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் 6-ம் தேதி வியாழக்கிழமை நடைபெறும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் தொகுதி, பர்கூர் மலைப்பகுதியை வனவிலங்கு சரணாலயமாக அறிவித்துள்ள திமுக அரசைக் கண்டித்து, அதிமுக சார்பில், மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் 6-ம் தேதி வியாழக்கிழமை நடைபெறும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அதிமுக பொதுச் செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி இன்று (4-ம் தேதி) வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பில், ஈரோடு மாவட்டம், அந்தியூர் தாலுகா, பர்கூர் ஊராட்சியில் உள்ள 35 குக்கிராமங்களில் சுமார் இரண்டாயிரம் ஆதிதிராவிடர் வகுப்பைச் சேர்ந்த குடும்பங்கள், நான்காயிரம் லிங்காயத்து வகுப்பைச் சேர்ந்த குடும்பங்கள் என்று சுமார் பதினெட்டாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.

பர்கூர் ஊராட்சியில் வசிக்கும் மலைவாழ் மக்களின் வாழ்வாதாரம் ஆடு, மாடுகளை வனப்பகுதிகளில் மேய்ச்சல் செய்வதும், செய்வதும், விவசாயம் செய்வதும் ஆகும். மேலும், வனப்பகுதிகளில் விளையக்கூடிய நெல்லிக்காய், சீமார்புல், கடுக்காய் முதலானவற்றை அப்பகுதியில் உள்ள பழங்குடியின மக்கள் வனக் குழுவின் மூலமாக, வனப்பகுதிக்குச் சென்று சேகரித்து வந்து அவைகளை விற்பனை செய்து வருமானம் ஈட்டி தங்கள் வாழ்க்கையை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், மக்களின் இயல்பு வாழ்க்கையை சீர்குலைக்கும் நோக்கத்தோடு செயல்பட்டு வரும் திமுக அரசு, பர்கூர் மலைப்பகுதியை வனவிலங்கு சரணாலயமாக அறிவித்துள்ளது. இதன் காரணமாக, இனிவரும் காலங்களில் வனப்பகுதிகளில் ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்கு கொண்டு செல்ல இயலாத சூழ்நிலையும், பழங்குடியினர் நெல்லிக்காய், சீமார் புல், கடுக்காய் போன்றவற்றை சேகரிக்க முடியாத சூழ்நிலையும் உருவாகும்.

அதேபோல், விவசாய நிலங்களில் விளையக்கூடிய பொருட்களை வாகனங்களில் எடுத்துச் செல்வதற்கும், மருத்துவ சிகிச்சைக்காக வாகனங்களை இயக்கவும் வனத்துறை அதிகாரிகள் தடை செய்யும் நிலைமையும் ஏற்படும். மேலும், மலைவாழ் மக்களுடைய விளைநிலங்களின் மதிப்பும் குறையும் சூழ்நிலை ஏற்படும். இதன் காரணமாக இப்பகுதியில் வாழும் மக்கள் தங்கள் வாழ்வாதாரங்களை முற்றிலுமாக இழக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. வாழ்வாதாரம் சிதையும்.

ஆகவே, அந்தியூர் தாலுகா, பர்கூர் மலைப்பகுதியை வனவிலங்கு சரணாலயமாக அறிவித்துள்ள திமுக அரசைக் கண்டித்தும்; ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரத்தை சிதைக்கும் வகையில் அறிவித்துள்ள இத்திட்டத்தை உடனடியாக திரும்பப்பெற வலியுறுத்தியும், அதிமுக ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டக் கழகத்தின் சார்பில், 6-ம்தேதி வியாழக்கிழமை காலை 11 மணியளவில், அந்தியூர் தொகுதி, பர்கூர் ஊராட்சி, தாமரைக்கரை என்ற இடத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம், கழக அமைப்புச் செயலாளரும், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.ஏ.செங்கோட்டையன், எம்எல்ஏ தலைமையில் நடைபெறும். இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள்; மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூராட்சி, கிளை, வார்டு அளவில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகளும், கழக உடன்பிறப்புகளும் கலந்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

ஏழை, எளிய மக்கள் நலனை முன்வைத்து நடைபெற உள்ள இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், விவசாயப் பெருங்குடி மக்களும், அளவில் கலந்துகொண்டு, விடியா திமுக அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு பொதுமக்களும் பெருந்திரளான கடும் கண்டனங்களை தெரிவிக்குமாறும் அன்போடு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!