ஈரோட்டில் திமுக அரசை கண்டித்து அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்

ஈரோட்டில் திமுக அரசை கண்டித்து அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்
X

திமுக அரசைக் கண்டித்து ஈரோட்டில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஈரோட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைவை கண்டித்தும், இதனை தடுக்க தவறிய முதலமைச்சர் ஸ்டாலினை கண்டித்தும் அதிமுக சார்பில் திங்கட்கிழமை (இன்று) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஈரோட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைவை கண்டித்தும், போதைப் பொருள் நடமாட்டம் அதிகரித்து விட்டதை கண்டித்தும், இதனை தடுக்க தவறிய முதலமைச்சர் ஸ்டாலினை கண்டித்தும் அதிமுக சார்பில் திங்கட்கிழமை (இன்று) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்ததை கண்டித்தும் போதை பொருட்களின் கேந்திரமாக தமிழகம் உள்ளதை கண்டித்தும், அதை தடுக்க தவறிய திமுக அரசை கண்டித்தும் இன்று (மார்ச் 04) தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.

அதன்படி, இன்று ஈரோடு வீரப்பன்சத்திரத்தில் ஈரோடு அதிமுக ஒருங்கிணைந்த மாவட்டம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் அமைச்சரும், ஈரோடு மாவட்ட செயலாளருமான கே.வி.ராமலிங்கம் தலைமை தங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் கே.எஸ்.தென்னரசு, சிவசுப்பிரமணியம், முன்னாள் மேயர் மல்லிகா பரமசிவம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன் எம்எல்ஏ, ,கருப்பணன் எம்எல்ஏ ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினர்.

ஜெயலலிதா பேரவை மாநில துணைச் செயலாளர்கள் வீரக்குமார், ஆற்றல் அசோக்குமார், பகுதி செயலாளர்கள் பெரியார் நகர் மனோகரன், கே.சி. பழனிச்சாமி, கேசவமூர்த்தி, ஜெகதீஷ், உட்பட பலர் கலந்து கொண்டு திமுக அரசை கண்டித்து கோஷம் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்திற்கான ஏற்பாடுகளை மாவட்ட மாணவரணி செயலாளர் ரத்தன் பிரித்வி, மாவட்ட இளைஞர் இளம்பெண் பாசறை செயலாளர் சிவக்குமார் ஆகியோர் செய்திருந்தனர்.

Tags

Next Story
ai future project