திருப்பூர் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் அருணாசலம் வேட்புமனு தாக்கல்

திருப்பூர் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் அருணாசலம் வேட்புமனு தாக்கல்
X

திருப்பூர் தொகுதி அதிமுக வேட்பாளர் அருணாசலம் வேட்புமனு தாக்கல் செய்தார்.

திருப்பூர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் அருணாசலம் திங்கட்கிழமை (இன்று) தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

திருப்பூர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் அருணாசலம் திங்கட்கிழமை (இன்று) தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

வரும் ஏப்ரல் 19ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்த நிலையில் திமுக, அதிமுக உள்ளிட்ட முக்கிய கட்சிகள் தங்கள் வேட்பாளர்களை அறிவித்துள்ளன. நாடாளுமன்ற தேர்தலுக்காக மார்ச் 20ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் பெரும்பாலான கட்சிகள் இன்று வேட்புமனு தாக்கல் செய்கின்றன.

அந்த வகையில், திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் அருணாசலம், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான கிறிஸ்துராஜிடம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். அப்போது. முன்னாள் அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், எம்.எஸ்.எம்.ஆனந்தன், திருப்பூர் வடக்கு தொகுதி எம்எல்ஏ கே.என்.விஜயகுமார், மாநில ஜெயலலிதா பேரவை இணைச் செயலாளர் சு.குணசேகரன் ஆகியோரும் உடன் இருந்தனர்.

மேலும், மாற்று வேட்பாளராக அருணாச்சலத்தின் மனைவி தீபா வேட்பு மனு தாக்கல் செய்தார். அப்போது முன்னாள் அமைச்சர் கே.சி.கருப்பணன், பெருந்துறை எம்எல்ஏ ஜெயக்குமார், முன்னாள் எம்பி சிவசாமி. பவானி நகர செயலாளர் சீனிவாசன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags

Next Story
ai solutions for small business