ஈரோடு மாவட்டத்தில் வரும் 25ம் தேதி வேளாண் குறைதீர் கூட்டம்: கலெக்டர்

ஈரோடு மாவட்டத்தில் வரும் 25ம் தேதி வேளாண் குறைதீர் கூட்டம்: கலெக்டர்
X

ஈரோடு மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி.

ஈரோடு மாவட்டத்தில் வரும் 25ம் தேதி வேளாண் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்தார்

ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்டரங்கில், மார்ச் மாதத்திற்கான வேளாண் குறைதீர்க்கும் கூட்டம் வரும் 25-ந் தேதி நாள் (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு நடக்கிறது. அன்று காலை 10 மணி முதல் 11.30 மணி வரை மனுக்கள் பெறப்படுகிறது.

அன்று 11.30 மணி முதல் 12.30 மணி வரை, விவசாய சங்க பிரதிநிதிகள் விவசாயம் தொடர்பான தங்கள் பகுதி பிரச்சினைகள் குறித்து கருத்துக்கள் தெரிவிக்கலாம். பிற்பகல் 12.30மணி முதல் 1.30 மணி வரை அலுவலர்கள் விளக்கம் அளிக்கிறார்கள்.

இந்த கூட்டத்தில் விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட கிருஷ்ணனுண்ணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி