அக்னிபாத் திட்டத்தில் ஆட்சேர்ப்பு: மார்ச் 22க்குள் விண்ணப்பிக்க அழைப்பு

அக்னிபாத் திட்டத்தில் ஆட்சேர்ப்பு: மார்ச் 22க்குள் விண்ணப்பிக்க அழைப்பு
X

அக்னிபாத் திட்டத்தில் ஆட்சேர்ப்பு.

அக்னிபாத் திட்டத்தின் கீழ் இந்திய ராணுவத்தில் ஆட்சேர்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் பங்கேற்க மார்ச் 22ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அக்னிபாத் திட்டத்தின் கீழ் இந்திய ராணுவத்தில் ஆட்சேர்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் பங்கேற்க மார்ச் 22ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கோயமுத்தூர் ராணுவ ஆட்சேர்ப்பு அலுவலகம், அக்னிபாத் திட்டத்தின் கீழ் ஆட்சேர்ப்பு ஆண்டு 2024-2025ம் ஆண்டுக்கான அக்னிவீர் சேர்க்கை நடைபெற உள்ளது. இதில், தமிழ்நாட்டின் கோவை, திருப்பூர், சேலம், ஈரோடு, கிருஷ்ணகிரி, திண்டுக்கல், நாமக்கல், நீலகிரி, மதுரை, தேனி மற்றும் தர்மபுரி ஆகிய 11 மாவட்டங்களை சேர்ந்தவர்கள் வருகிற மார்ச் மாதம் 22ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

தேர்வுக்கு திருமணமாகாத ஆண் விண்ணப்பதாரர்கள் www.joinindianarmy.nic.in, http://www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். அக்னிவீரர்களின் ஆட்சேர்ப்பு இரண்டு கட்டங்களாக மேற்கொள்ளப்படும். முதல் கட்டம் ஆன்லைன் கணினி அடிப்படையிலான எழுத்து தேர்வு, இரண்டாம் கட்டம் ஆட்சேர்ப்பு பேரணி (உடற்தகுதி தேர்வு) ஆகும்.

ஆன்லைன் தேர்வு வருகிற ஏப்ரல் மாதம் 22ம் தேதி முதல் நடைபெறும். இந்திய ராணுவத்தில் வீரர்கள் தேர்ந்தெடுக்ப்படுவது நியாயமாகவும், வெளிப்படையாகவும் மற்றும் தகுதியின் அடிப்படையில் மட்டுமே. இந்திய ராணுவத்தில் தேர்வு அல்லது ஆட்சேர்ப்புக்கு எந்த நிலையிலும் லஞ்சம் பெறப்படுவதில்லை.

தகுதியற்ற நபர்கள் ஆட்சேர்ப்பு முகவர்கள் என கூறினால், அவர்களை நம்பி ஏமாற வேண்டாம். எனவே,கோவையில் நடக்கும் அக்னிபாத் திட்டத்தின் கீழ் நடக்கும் ஆட்சேர்ப்பு முகாமில் தகுதியானவர்கள் பங்கேற்று இந்திய ராணுவத்தில் பணிக்கு சேரும் வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளலாம்.

Tags

Next Story