ஈரோடு மாநகராட்சியில் கொசு ஒழிப்பு பணியாளர்களுக்கு ஆலோசனை
ஈரோடு மாநகராட்சி அலுவலக வளாகத்தில் கொசு ஒழிப்பு பணியாளர்களுக்கான ஆலோசனை மற்றும் புத்தாக்க பயிற்சி நடைபெற்றது.
ஈரோடு மாநகராட்சியில் கொசு ஒழிப்பு பணியாளர்களுக்கான ஆலோசனை மற்றும் புத்தாக்க பயிற்சி செவ்வாய்க்கிழமை (இன்று) நடைபெற்றது.
ஈரோடு மாவட்டத்தில், தற்போது பெய்து வரும் மழையினாலும் எதிர் வரும் தொடர் பருவ மழையினாலும் தண்ணீர் தேங்கி கொசுப் பெருக்கம் ஏற்பட்டு டெங்கு காய்ச்சல் உள்ளிட்ட கொசுக்களால் பரவும் நோய்களைத் தடுக்கும் வகையில், மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கராவின் உத்தரவின்படி, ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் கொசு ஒழிப்பு பணியாளர்க்களுக்கான டெங்கு ஒழிப்பு ஆலோசனை மற்றும் புத்தாக்க பயிற்சி செவ்வாய்க்கிழமை (இன்று) நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாநகராட்சி ஆணையாளர் ஜானகி ரவீந்திரன், துணை இயக்குனர் சுகாதார பணிகள் சோமசுந்தரம், மாநகர நல அலுவலர் பிரகாஷ், மாவட்ட மலேரியா அலுவலர், சுகாதார அலுவலர்கள் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர். மாநகராட்சி பகுதியில் கொசு ஒழிப்பு பணிக்கான பிரத்தியேகமாக நியமிக்கப்பட்டுள்ள 300 தற்காலிக கொசு ஒழிப்பு பணியாளர்கள் மற்றும் 20 மேற்பார்வையாளர்களுக்கு கொசு ஒழிப்பு பணியின் முக்கியத்துவம், அணுகுமுறைகள், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
தொடர்ந்து, காய்ச்சல் விவரங்கள் சேகரித்து அனுப்புதல் உள்ளிட்ட பணிகள் குறித்து மாவட்ட மலேரியா அலுவலர், மாநகர நல அலுவலர், துணை இயக்குனர், மாநகராட்சி ஆணையாளர் ஆகியோர் ஆலோசனை மற்றும் பயிற்சி அளித்தனர். அனைவரும் டெங்கு தடுப்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
மாநகராட்சி பகுதிகளில் உள்ள 60 வார்டுகளிலும் கொசு ஒழிப்புப் பணிக்கு 25 எண்ணிகையிலான புகை மருந்து இயந்திரங்கள் மற்றும் 3 எண்ணிக்கையிலான இலகுரக வாகனத்தில் பொருத்தப்பட்ட புகை மருந்து இயந்திரங்களை பயன்படுத்தப்பட்டு வருவதை ஆய்வு செய்தனர். மாநகராட்சி அலுவலக வளாகத்தில் டெங்கு தடுப்பு விழிப்புணர்வு கண்காட்சியும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu