ஈரோடு தொகுதி அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார் வேட்புமனு தாக்கல்
ஈரோடு மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான ராஜ கோபால் சுன்கராவிடம் ஈரோடு தொகுதி அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார் வேட்புமனு தாக்கல் செய்தார்.
ஈரோடு தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார் திங்கட்கிழமை (இன்று) தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
தமிழகம் முழுவதும் ஏப்.19ல் ஒரே கட்டமாக நாடாளுமன்றத் தோ்தல் நடைபெறவுள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த புதன்கிழமை தொடங்கியது. வேட்பு மனு தாக்கல் செய்ய வருகிற 27ம் தேதி கடைசி நாளாகும். இந்த நிலையில், ஈரோடு நாடாளுமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார் ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான ராஜ கோபால் சுன்கராவிடம் வேட்புமனு தாக்கல் செய்தார்.
ஈரோடு அதிமுக மாநகர செயளாலரும் முன்னாள் அமைச்சருமான கே.வி.ராமலிங்கம், தேமுதிக மாவட்ட செயலாளர் ஆனந்த், எஸ்டிபிஐ கட்சி மாவட்டத் தலைவர் முகமது லுக்மான், முன்னாள் மண்டல தலைவர் முனியப்பன் ஆகியோர் உடனிருந்தனர்.
அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார் மாவட்டம் கொடுமுடி வட்டம் புதுப்பாளையம் கிராமத்தில் 1970 ஜூன் 5ம் தேதி பிறந்தார். இவரது தந்தை பேராசிரியர் ஆறுமுகம், இவரது தாயார் பேராசிரியை கே.எஸ். சௌந்தரம், இவர் முன்னாள் எம்பி ஆவர். இவருக்கு கருணாம்பிகை என்ற மனைவியும் அஸ்வின் குமார் மற்றும் நிதின் குமார் என்று இரண்டு மகன்களும் உள்ளனர்.
இவர் தற்போது பாரதிய ஜனதா கட்சி சார்பில் மொடக்குறிச்சி தொகுதியில் வெற்றி பெற்ற சரஸ்வதி எம்எல்ஏ மருமகன் ஆவார். இவர் கோயமுத்தூர் அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் இளங்கலை மென்பொருள் படிப்பும் அமெரிக்கா கெண்டக்கி லூயிஸ் வில் பல்கலைக்கழகத்தில் முதுநிலை மின் மற்றும் கணினி பொறியியல் படிப்பும் அமெரிக்கா இந்தியனா இன்டியானா போலீஸ் பல்கலைக்கழகத்தில் முதுநிலை வணிக நிர்வாக படிப்பும் படித்துள்ளார்.
2000 முதல் 2005 வரை அமெரிக்க மைக்ரோசாப்ட் கார்ப்பரேஷனில் அமெரிக்க பிராந்திய விற்பனை மேலாளராகவும், அமெரிக்க வணிக மேம்பாட்டு இன்டல் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் அமெரிக்க வணிக மேம்பாட்டு மேலாளராகவும், ஜெராக்ஸ் கார்ப்பரேஷன் அமெரிக்க தொழில்நுட்ப விற்பனை ஆய்வாளராகவும் பணிபுரிந்துள்ளார்.
மேலும் இவர் பாரதிய ஜனதாவில் இருந்து கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அதிமுக மற்றும் பாரதிய ஜனதா அரசியல் கட்சியின் பின்புலத்தை சார்ந்த இவர் அதிமுக சார்பில் ஈரோடு நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டு மனுதாக்கல் செய்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu