ஈரோடு தெற்கு மாவட்ட திமுக சார்பில் இல்லம் தோறும் இளைஞரணி உறுப்பினர் சேர்க்கை
Erode news- ஈரோடு தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளர் ஜெ.திருவாசகம்.
Erode news, Erode news today- ஈரோடு தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில், இல்லம் தோறும் இளைஞரணி உறுப்பினர் சேர்க்கை வருகிற 16ம் தேதி முதல் துவங்குகிறது.
இது குறித்து ஈரோடு தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளர் ஜெ.திருவாசகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
திமுக தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் கரத்தை வலுப்படுத்த, திமுக இளைஞர் அணியின் செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தலைமையில் 'இல்லம் தோறும் இளைஞர் அணி' உறுப்பினர் சேர்க்கை தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பான முறையில் நடந்து வருகிறது.
அதேபோல், தந்தை பெரியாரின் பகுத்தறிவு மண்ணான ஈரோடு மாவட்டத்தில், திமுக ஈரோடு தெற்கு மாவட்ட செயலாளரும், அமைச்சருமான சு.முத்துசாமி ஆலோசனையில், திமுக மாநில இளைஞரணி துணை செயலாளரும், ஈரோடு எம்பியுமான கே.இ.பிரகாஷ், மண்டல பொறுப்பாளர் பி.எஸ்.சீனிவாசன் ஆகியோரது மேற்பார்வையில், ஈரோடு தெற்கு மாவட்ட இளைஞர் அணி சார்பில் மாவட்ட, மாநகர பகுதிகளில் உள்ள வட்ட கழகங்கள் மற்றும் ஒன்றிய பேரூர்களில் உள்ள கிளை கழகங்களில் பாக வாரியாக இல்லம் தோறும் இளைஞர் அணி உறுப்பினர் சேர்க்கை வரும் 16ம் தேதி முதல் துவங்கப்பட உள்ளது.
அந்தந்த, பகுதி செயலாளர்கள், ஒன்றிய பேரூர் செயலாளர்கள் தலைமையில் கிளை கழக செயலாளர்கள் மற்றும் பாக முகவர்கள் முன்னிலையில், பாக இளைஞரணி பொறுப்பாளர்களை கொண்டு பொறுப்பேற்றுள்ள மாவட்ட மாநகர துணை அமைப்பாளர்கள் அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் இளைஞரணியினரை ஒருங்கிணைத்து உறுப்பினர் சேர்க்கையை நடத்திட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu