பவானி கூடுதுறையில் ஆடிப்பெருக்கு விழா ஆலோசனை கூட்டம்

பவானி கூடுதுறையில் ஆடிப்பெருக்கு விழா ஆலோசனை கூட்டம்
X

பவானி கூடுதுறையில் ஆடிப்பெருக்கு விழாவையொட்டி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

பவானி கூடுதுறையில் ஆடிப்பெருக்கு விழா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டம் பவானி வட்டாட்சியர் முத்துகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது.

தென்னகத்தின் திரிவேணி சங்கமம் என்று அழைக்கப்படும் காவிரி, பவானி மற்றும் கண்ணுக்குப் புலப்படாத அமுத நதிகள் சங்கமிக்கும் பவானி கூடுதுறையில் ஆடிப்பெருக்கு விழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம்.

இந்த நிலையில் இந்த ஆண்டு மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றுக்கு 65 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால், பக்தர்கள் பாதுகாப்பாக புனித நீராடுவது குறித்த ஆலோசனை கூட்டம் பவானி வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.


வட்டாட்சியர் முத்துகிருஷ்ணன் தலைமை வகித்தார். இக்கூட்டத்தில்,பக்தர்களின் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த, கூடுதல் வசதிகள் செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

மேலும், காவிரி ஆற்றில் நீர்வரத்தை பொறுத்து மாவட்ட ஆட்சியரின் அறிவுரை படி மாற்றம் செய்யப்படும் என வட்டாட்சியர் முத்துகிருஷ்ணன் தெரிவித்தார். நடைபெற்ற கூட்டத்தில், நகராாட்சி ஆணையாளர் தாமரை, இந்து அறநிலையத்துறையின் உதவி ஆய்வாளர் சாமிநாதன், பவானி காவல் துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story