பவானி, அந்தியூரில் நீர்வளத்துறை கூடுதல் தலைமை செயலாளர் ஆய்வு

பவானி, அந்தியூரில் நீர்வளத்துறை கூடுதல் தலைமை செயலாளர் ஆய்வு

பவானி, அந்தியூரில் நீர்வள, நிலவள திட்டத் பணிகள் குறித்து கூடுதல் தலைமை செயலாளர் ஆய்வு மேற்கொண்டார்.

பவானி, அந்தியூர் நீர்வள, நிலவள திட்டப் பணிகள் குறித்து தமிழ்நாடு நீர்வளத்துறை கூடுதல் தலைமை செயலாளர் ஆய்வு பணிகள் செய்தார்.

மேட்டூர் மேற்குக்கரை வாய்க்கால் மற்றும் அந்தியூர், ஆப்பக்கூடல் ஏரிகளில் நீர்வள, நிலவளத் திட்டப் பணிகள் குறித்து தமிழ்நாடு நீர்வளத்துறை கூடுதல் தலைமை செயலாளரும், நீர்ப்பாசன மேலாண்மை அபிவிருத்தி திட்ட இயக்குநருமான எஸ்.ஜவகர் நேற்று (வியாழக்கிழமை) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர், ஆப்பக்கூடல் ஏரிகளில் உலக வங்கி நிதியுதவியுடன் 2017-18 ஆண்டுகளில் நீர்வள, நிலவளத் திட்டத்தில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளின் முன்னேற்றம் மேலும் தற்போது உள்ள நிலை, நிறைவேற்றப்பட்ட பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டதோடு, ஏரிப் பாசன விவசாயிகளிடம் தற்போதைய தேவை குறித்து அப்போது கூடுதல் தலைமை செயலாளர் ஜவகர் கேட்டறிந்தார். அப்போது வலது கரை வாய்க்கால் பாசன விவசாயி கள் கால்வாய் புனரமைப்பு பணிகள் நல்ல முறையில் விவசாயிகளுக்கு பயன் அளிப்பதாகவும், வாய்க்கா லின் இருபுறமும் கான்கிரீட் தளம் அமைத்த தால் கால்வாயி லிருந்து நீர் கசிவால் வேளாண் பயிர்கள் சேதம் ஆவது தடுக்கப்பட்டிருப்பதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

இதேபோன்று, மேட்டூர் மேற்குக்கரை வாய்க்காலில் புனரமைப்புப் பணிகள் தொடர்பாக அம்மாபேட்டை பகுதியில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் நீர் மேலாண்மை நிபுணர் கிருஷ்ணன், நீர்வளத்துறை கண்காணிப்பு பொறியாளர் அன்பழகன், பவானிசாகர் அணைக்கோட்ட செயற்பொறியாளர் அருளழகன், செயற்பொறியாளர் சிவக்குமார், உதவி செயற்பொறியாளர் சாமிநாதன், பவானி உபகோட்ட உதவி செயற்பொறியாளர் இளங்கோ, உதவி பொறியாளர்கள் கவுதமன், தமிழ்பாரத், சுலைமான் மற்றும் துறை பொதுப்பணித்துறைடிய சேர்ந்த அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story