ஈரோடு கொங்கு கலை அறிவியல் கல்லூரியில் சாதனையாளர் தின விழா கொண்டாட்டம்

ஈரோடு கொங்கு கலை அறிவியல் கல்லூரியில் சாதனையாளர் தின விழா கொண்டாட்டம்
X

சாதனையாளர் தின விழாவில் எடுக்கப்பட்ட படம்.

ஈரோடு கொங்கு கலை அறிவியல் கல்லூரியில் சாதனையாளர் தின விழா கொண்டாடப்பட்டது.

ஈரோடு கொங்கு கலை அறிவியல் கல்லூரியில் சாதனையாளர் தின விழா கொண்டாடப்பட்டது.

ஈரோடு திண்டல் அருகே நஞ்சனாபுரத்தில் உள்ள கொங்கு கலை அறிவியல் கல்லூரியில் சாதனையாளர் தின விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு பெருந்துறை கொங்கு பாலிடெக்னிக் கல்லூரியின் தாளாளர் வெங்கடாசலம் தலைமை வகித்தார். கொங்கு கலை அறிவியல் கல்லூரியின் தாளாளர் தங்கவேல், முதல்வர் முனைவர் வாசுதேவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


சிறப்பு அழைப்பாளராக கோவை ஆட்டோ காஸ்ட் பவுண்டரி நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி மதன்மோகன் பங்கேற்ற, உலகின் சாதனையாளர்களை சுட்டிக்காட்டி மாணவர்களும் சாதனையாளராக எதிர்காலத்தில் திகழவேண்டும் என்று தன்னம்பிக்கை உரையாற்றினார். மேலும் தமிழ்நாடு அரசின் தொழில் மற்றும் வணிகத்துறையைச் சார்ந்த தொழில் கூட்டுறவு அலுவலர் ஷோபனா தான் கடந்துவந்த கடினமான பாதையினையும் வெற்றி பெற்ற பிறகு கிடைக்கப் பெற்ற அங்கீகாரம் குறித்தும் பேசினார்.

தொடர்ந்து, நடப்பாண்டில் சாதனை படைத்த கல்லூரி மாணவ-மாணவிகள் மற்றும் பேராசிரியர்களுக்கு பதக்கங்கள், கோப்பைகள் மற்றும் ஊக்கத்தொகை வழங்கப்பட்டன. முன்னதாக கொங்கு கலை அறிவியல் கல்லூரியின் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு அலுவலர் சுரேஷ்குமார் வரவேற்றார். நிறைவில் நுண்கலை மன்ற ஒருங்கிணைப்பாளர் கோகிலா நன்றி கூறினார். இந்நிகழ்ச்சியில், கல்லூரியின் துறைத்தலைவர்கள் மற்றும் பேராசிரியர்கள், மாணவ-மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டார்.

Tags

Next Story
நைட்ல இதெல்லாம் சாப்பிட கூடாதா...? அச்சச்சோ !.. இது தெரியாம இருந்துடீங்களே !