சத்தியமங்கலம்: திம்பம் மலைப்பாதை சாலையில் நடமாடிய காட்டு யானை

Erode news- திம்பம் மலைப்பாதை சாலையில் நடமாடிய ஒற்றை காட்டு யானை.
Erode news, Erode news today- சத்தியமங்கலம் அடுத்த திம்பம் மலைப்பாதை சாலையில் நடமாடிய காட்டு யானையால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகத்தின் வழியாக தமிழ்நாடு - கர்நாடகா மாநிலங்களை இணைக்கும் சத்தியமங்கலத்தில் இருந்து மைசூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது.இந்த தேசிய நெடுஞ்சாலையை யானைகள் குட்டிகளுடன் அவ்வப்போது சாலையை கடந்து செல்வது வழக்கம்.
தற்போது, சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் கடுமையான வறட்சி நிலவுகிறது. இதனால், வனப்பகுதியை விட்டு வெளியேறும் காட்டு யானைகள் இந்த வனப்பகுதி வழியாக அமைந்துள்ள சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் நடமாடுகின்றன.
இந்நிலையில், பண்ணாரி அம்மன் கோவிலை அடுத்த திம்பம் மலைப் பாதையில் காட்டு யானை ஒன்று சாலை ஓரத்தில் நின்றபடி அங்கும் இங்கும் நடமாடியது. யானையை கண்ட வாகன ஓட்டிகள் மற்றும் பேருந்து பயணிகள் அச்சமடைந்தனர். பேருந்து மற்றும் காரில் சென்ற பயணிகள் காட்டு யானையை தங்களது செல்போன்களில் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டனர்.
மேலும், திம்பம் மலைப் பாதையில் பகல் நேரங்களிலேயே காட்டு யானைகள் நடமாட்டம் உள்ளதால் வாகன ஓட்டிகள் கவனமாக செல்லுமாறும், மலைப்பாதையில் செல்லும்போது வாகனத்தை விட்டு கீழே இறங்க வேண்டாம் என்றும் வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu