ஈரோடு ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 'ஏய் தள்ளு தள்ளு' மக்கர் செய்த அரசு அதிகாரியின் வாகனம்

ஈரோடு ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஏய் தள்ளு தள்ளு மக்கர் செய்த அரசு அதிகாரியின் வாகனம்
X

பழுதான அரசு அதிகாரியின் வாகனத்தை தள்ளி சென்ற போது எடுத்த படம்.

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அரசு அதிகாரியின் நான்கு சக்கர வாகனம் ஒன்று பழுதாகி நின்றதால் அதனை தள்ளி ஸ்டார்ட் செய்யும் அவலமானது நிகழ்ந்துள்ளது.

Erode Today News, Erode Live Updates, Erode News- ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அரசு அதிகாரியின் நான்கு சக்கர வாகனம் ஒன்று பழுதாகி நின்றதால் அதனை தள்ளி ஸ்டார்ட் செய்யும் அவலமானது நிகழ்ந்துள்ளது.

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று (நவ.4) திங்கட்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரசு அதிகாரிகள் கலந்து கொள்வதற்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வாகனத்தில் வந்து உள்ளனர்.

அப்போது, ஒரு அரசு அதிகாரியின் நான்கு சக்கர வாகனமானது (ஜீப்) ஸ்டார்ட் ஆகாமல் பழுதாகி நின்று உள்ளது. இதனைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இருந்த சிலர் பழுதாகி நின்ற அதிகாரியின் நான்கு சக்கர வாகனத்தை தள்ளி ஸ்டார்ட் செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இது குறித்தான வீடியோ பதிவு தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வைரலாகி வருகிறது. மேலும், அந்த வாகனத்தில் பவானி வட்டாட்சியர் என்று குறிப்பிட்டிருந்தது.

Tags

Next Story