கோபி நகராட்சியில் குடிநீர் வினியோகம் செய்ய ரூ.28 லட்சத்தில் லாரி!

கோபி நகராட்சியில் குடிநீர் வினியோகம் செய்ய ரூ.28 லட்சத்தில் லாரி!
X

புதிய குடிநீர் லாரியை கோபி நகர்மன்ற தலைவர் நாகராஜ் கொடியசைத்து தொடங்கி வைத்த காட்சி.

கோபி நகராட்சியில் குடிநீர் வினியோகம் செய்ய ரூ.28 லட்சத்தில் குடிநீர் லாரி சேவையை நகர்மன்ற தலைவர் நாகராஜ் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

கோபி நகராட்சியில் குடிநீர் வினியோகம் செய்ய ரூ.28 லட்சத்தில் குடிநீர் லாரி சேவையை நகர்மன்ற தலைவர் நாகராஜ் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் நகராட்சி பகுதியில் 30 வார்டுகள் உள்ளன. இதில் சுமார் 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில், வார்டுகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் பகுதிகளில் தொடர்ச்சியாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென நகராட்சி நிர்வாகத்திடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

அதனடிப்படையில், நகராட்சி நிர்வாகம் சார்பில், 15வது நிதிக் குழு மானிய திட்டத்தின் கீழ், குடிநீர் வினியோகம் செய்வதற்காக ரூ.28 லட்சம் மதிப்பீட்டில் சுமார் 6 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய குடிநீர் லாரி வாங்கப்பட்டது. இதனையடுத்து, புதிதாக வாங்கப்பட்டுள்ள இந்த லாரியை பொதுமக்களின் சேவைக்காக வழங்கும் நிகழ்ச்சி நகராட்சி அலுவலகம் முன்பு, நடைபெற்றது. நிகழ்ச்சியில், நகர்மன்றத் தலைவர் நாகராஜ் தலைமை வகித்து குடிநீர் லாரி சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் நகராட்சி அலுவலர்கள், நகர்மன்ற உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!