பவானி அருகே ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் தென்னை மரங்கள் எரிந்து சேதம்

ஈரோடு மாவட்டம் பவானி அடுத்த சிங்கம்பேட்டையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் தென்னை மரங்கள் எரிந்து சேதமானது.

HIGHLIGHTS

பவானி அருகே ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் தென்னை மரங்கள் எரிந்து சேதம்
X

சிங்கம்பேட்டை தோட்டத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து.

பவானி அடுத்த சிங்கம்பேட்டையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் தென்னை மரங்கள் எரிந்து சேதமானது.

ஈரோடு மாவட்டம் பவானி அடுத்த அம்மாபேட்டை அருகே உள்ள சிங்கம்பேட்டையை சேர்ந்தவர் ராஜகோபால் மகன் சுதன். இவருக்குச் சொந்தமான 18 ஏக்கர் தோட்டம் அப்பகுதியில் உள்ளது. இதில், 100க்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் உள்ளன. இந்த நிலையில், தென்னை மட்டை அப்பகுதியில் சென்ற மின் கம்பியில் உரசியதில் தீ பிடித்தது.

இந்த தீ நிலத்தில் பரவலாக உலர்ந்த நிலையில் காணப்பட்ட புற்களில் பிடித்து, கொழுந்து விட்டு எரியத் தொடங்கியது. இதனால், அப்பகுதி ஒரே புகை மண்டலமாக காட்சி அளித்தது. இதுகுறித்து, பவானி தீயணைப்புத் துறையினருக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த வந்த தீயணைப்பு துறையினர் தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர். சுமார் 3 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.சேத மதிப்பு குறித்த விவரங்கள் தெரியவில்லை. இதுகுறித்து, அம்மாபேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Updated On: 13 Feb 2024 1:32 PM GMT

Related News

Latest News

 1. தமிழ்நாடு
  சிறப்பு மாஜிஸ்திரேட் நீதிமன்றம் அமைப்பது குறித்து தலைமைச் செயலாளர்...
 2. வீடியோ
  எ.பழனிசாமி ஆட்சியா நடந்துச்சு ? கல்லாப்பெட்டி கம்பெனி நடந்துச்சு !#ttv...
 3. இந்தியா
  செல்போன் இருந்தா..நீங்களும் தேசிய படைப்பாளி விருது வாங்கலாம்..!
 4. லைஃப்ஸ்டைல்
  Funny Food Quotes In Tamil உணவுக்கு முன் பசியுடன் இருப்பதை விட ...
 5. வீடியோ
  EPS-ஐ ஓட ஓட விரட்ட வேண்டும் | தொண்டர்களுக்கு உத்தரவுபோட்ட OPS |...
 6. வீடியோ
  MGR வகுத்த சட்டவிதிகள் ! மாற்றியமைத்த பழனிசாமி !#ops #OPS #OPSspeech...
 7. நாமக்கல்
  ரூ. 57.22 லட்சம் திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய ராஜேஷ்குமார்...
 8. லைஃப்ஸ்டைல்
  Kapam Quotes In Tamil ஆன்மாவின் ஆழத்திலிருந்து எழும் முழக்கமே...
 9. காஞ்சிபுரம்
  ஸ்ரீ புஷ்பவள்ளி தாயார் சமேத ஸ்ரீ அஷ்டபுஜ பெருமாள் கோயில்
 10. வீடியோ
  🔴 LIVE | மதுராந்தகம் & செய்யூர் சட்டமன்றத்தில் அண்ணாமலை...