ஈரோடு மாநகராட்சியில் ரூ.3.33 கோடி உபரி பட்ஜெட் தாக்கல்

ஈரோடு மாநகராட்சியில் ரூ.3.33 கோடி உபரி பட்ஜெட் தாக்கல்
X

ஈரோடு மாநகராட்சியில் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தில் பட்ஜெட்டை நிதிக்குழு தலைவர் மல்லிகா நடராஜன், மேயர் நாகரத்தினம் சுப்பிரமணியத்திடம் வழங்கினார்.

ஈரோடு மாநகராட்சியில் 2024-25 ஆம் ஆண்டுக்கு தாக்கல் செய்யப்பட்ட நிதி நிலை அறிக்கையில் ரூ.3.33 கோடி உபரி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

ஈரோடு மாநகராட்சியில் 2024-25 ஆம் ஆண்டுக்கு தாக்கல் செய்யப்பட்ட நிதி நிலை அறிக்கையில் ரூ.3.33 கோடி உபரி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

ஈரோடு மாநகராட்சி யின் 2024-2025ம் ஆண்டு பட்ஜெட் மாமன்ற கூட்டத்தில் தாக்கல் செய்யப்பட்டது. கூட்டத்தில் மாநகராட்சி ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி, துணை மேயர் செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பட்ஜெட் நகல் பெட்டியை நிதிக்குழுத் தலைவர் மல்லிகா நடராஜன் குழு உறுப்பினர்களுடன் கொண்டு வந்து மேயர் நாகரத்தினத்திடம் ஒப்படைத்தார். இதையடுத்து, மேயர் நாகரத்தினம் வரவு செலவு பட்ஜெட்டினை மாமன்றத்தில் தாக்கல் செய்தார்.

தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளதாவது:- 2024-25ம் நிதி ஆண்டில், சொத்து வரி மூலம் ரூ.70.18 கோடி வருவாய் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதிலிருந்து வருவாய்க்கு ரூ.30.50 கோடியும், குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் நிதிக்கு ரூ.27.47 கோடியும், ஆரம்ப கல்வி நிதிக்கு ரூ.12.21 கோடியும் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். இம்மாநகராட்சி எல்லைக்குள் இயங்கிவரும் தனியார் நிறுவனங்கள் மற்றும் வியாபார ஸ்தாபனங்கள் மூலமாகவும், அரசு அலுவலகங்களில் பணிபுரியும் பணியாளர்கள் மூலமாக அரசு அலு வலகங்களில் பணிபுரியும் பணியாளர்கள் மூலமாக 2024-25ம் நிதி ஆண் , தொழில்வரி மூலம் மட்டும் ரூ.7.20 கோடி வருவாய் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பதிவுத்துறை மூலமாக சொத்து மாற்றங்களுக்குரிய வரி ரூ.8 கோடியும் கேளிக்கை வரியாக ரூ.3 கோடியும் என மொத்தம் ரூ.11 கோடி வருவாய் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாநகராட்சிக்கு சொந்தமான வணிக வளாகம், மார்க்கெட், பேருந்து நிலையம், வாகன நிறுத்தம் மற்றும் சிறு குத்தகையினங்கள் மூலமாக வருகின்ற நிதியாண்டில் ரூ 11.94 கோடி வருவாய் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதே போல ஒப்பந்ததாரர்கள் உரிமம் பெற்ற குழாய் பொருத்துநர்கள் மாநகராட்சியில் பதிவு பெற்ற கட்டிட பொறியாளர்கள் பதிவுக்கட்டணம், தொழில் உரிமக் கட்டணம், குடிநீர் பாதாளச் சாக்கடை கட்டணம் மூலமாக ரூ. 63.10 கோடி வருவாய் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஈரோடு மாநகராட்சிக்கு வேலை பணிகளுக்காக மானியங்கள் மற்றும் கடன்கள் மூலமாக ரூ.387.80 கோடி வரப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாநகராட்சி பணியாளர்களுக்கு ஊதிய செலவினத்திற்காக ரூ. 95.02 கோடியும், ஓய்வூதியப் பயன்களுக்காக ரூ. 25.84 கோடியும், நிர்வாக செலவினத்திற்காக ரூ.6.27 கோடியும் செலவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. வருவாய், குடிநீர் விநியோகம் மற்றும் கல்வி நிதிகளில் பராமரிப்பு மற்றும் பழுதுபார்த்தல் செலவினங்களுக்காக ரூ.78.62 கோடி செலவாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மாநகராட்சியில் வேலை பணிக்களுக்காக பெறப்பட்ட கடன்களுக்கு 2024-2025ம் ஆண்டில் அசல் மற்றும் வட்டி செலவினங்கள் ரூ.13.47 கோடி செலவாகும் என எதிர் பார்க்கப்படுகிறது. ஈரோடு மாநகராட்சியில் வருவாய், குடிநீர் விநியோகம் மற்றும் கல்வி நிதிகளில் பொது நிதி மற்றும் மானியங்கள் மூலமாக மூலதன வேலை பணிகளுக்காக ரூ.414.98 கோடி செலவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. நிதி உபரி ரூ.3.33 கோடியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் படி மாநகராட்சியின் மொத்த வருவாய் ரூ.650 கோடியாகவும், செலவினம் ரூ.647 கோடியாகவும் இருக்கும் என்றும், உபரி நிதியாக ரூ.3.33 கோடி இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, அதிமுக கவுன்சிலர்களின் கேள்விகளுக்கு மாநகராட்சி ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி பதிலளித்து கூறியதாவது, கடந்த ஆண்டை போல் அல்லாமல் இந்த ஆண்டு உபரி மற்றும் பாசிட்டிவ் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு சொத்து வரி வசூல் மேம்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ரூ.50.60 கோடியாக இருந்த சொத்து வரி வருவாய் வரி உயர்வுக்கு பிறகு ரூ.64 கோடியாக இருந்தது. சொத்து வரி வருவாயை ரூ.100 கோடியாக உயர்த்தி, மாநகராட்சியை தன்னிறைவு அடையச் செய்வதே எங்கள் நோக்கம். கனி ஜவுளி மார்க்கெட் கடைகளை ஏலம் விட்டதன் மூலம் இதுவரை ரூ.13 கோடியும், நேதாஜி மார்க்கெட் வளாக ஏலத்தில் ரூ.3 கோடி வைப்புத்தொகையும் கிடைத்துள்ளது.

ஆனால், 13 கோடி ரூபாய், 3 கோடி ரூபாய் வருமானம், திருத்தப்பட்ட பட்ஜெட்டில் இடம் பெறுவதாக ஆணையாளர் கூறியும் பட்ஜெட்டில் காட்டப்படவில்லை எனக் கூறி சூரம்பட்டி ஜெகதீசன், தங்கமுத்து தலைமையில் 6 அதிமுக உறுப்பினர்கள் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!