ஈரோடு மாவட்டத்தில் உள்ள 13 ஊராட்சிகளில் வரும் 9ம் தேதி சிறப்பு கிராம சபைக் கூட்டம்
கிராம சபைக் கூட்டம் (மாதிரிப் படம்).
ஈரோடு மாவட்டத்தில் உள்ள 13 ஊராட்சிகளில் வரும் 9ம் தேதி சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடைபெறவுள்ளது.
இதுதொடர்பாக ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா இன்று (6ம் தேதி) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ஈரோடு மாவட்டத்தில் பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம் (ஊரகம்) 2016-17 முதல் 2021-22 வரையிலான காலத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்ட வீடுகள் மற்றும் ஆவணங்களை சமூகத் தணிக்கை மேற்கொண்டு சமூக தணிக்கை நிறைவு பெறும் நாளான வரும் 9ம் தேதியன்று சிறப்பு கிராம சபைக் கூட்டம் மேட்டுநாசுவம்பாளையம், எழுமாத்துார், இச்சிபாளையம், நிச்சாம்பாளையம், குமாரவலசு, குருவரெட்டியூர், சின்னத்தம்பி பாளையம், ஓடத்துறை, மொடச்சூர், கரட்டுப்பாளையம், கொண்டையம்பாளையம், சிக்கரசம்பாளையம் மற்றும் நல்லுார் ஆகிய 13 கிராம ஊராட்சிகளில் நடைபெறவுள்ளது.
கிராம சபை நடைபெறும் இடம், நேரம், ஆகியன தொடர்புடைய கிராம ஊராட்சிகள் மூலம் பொதுமக்களுக்கு அறிவிக்கப்படும். கிராம சபைக் கூட்டங்கள் நடைபெறும் கிராம ஊராட்சிகளில் கூட்டம் முறையாக நடைபெறுவதைக் கண்காணிக்கும் பொருட்டு வட்டார அளவில் மற்றும் ஊராட்சி அளவிலான பற்றாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu