கள்ளிப்பட்டி அருகே வாழை தோட்டத்துக்குள் புகுந்து ஒற்றை காட்டு யானை அட்டகாசம்

கள்ளிப்பட்டி அருகே வாழை தோட்டத்துக்குள் புகுந்து ஒற்றை காட்டு யானை அட்டகாசம்
X

வாழைகளை சேதப்படுத்திய காட்டு யானை.

கள்ளிப்பட்டி அருகே வாழை தோட்டத்துக்குள் புகுந்து அட்டகாசம் செய்த காட்டு யானையை கிராம மக்கள் பட்டாசு வெடித்து விரட்டினர்.

கள்ளிப்பட்டி அருகே வாழை தோட்டத்துக்குள் புகுந்து அட்டகாசம் செய்த காட்டு யானையை கிராம மக்கள் பட்டாசு வெடித்து விரட்டினர்.

ஈரோடு மாவட்டம், கோபி கள்ளிப்பட்டி அருகேயுள்ள பெருமுகை கிராம வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானை ஒன்று சஞ்சீவராயன் குளம் அருகேயுள்ள மணி என்பவரது விவசாய தோட்டத்திற்குள் நேற்று (வெள்ளிக்கிழமை) காலை புகுந்தது. சுமார் ஒன்றரை ஏக்கரில் கரும்பு விளைவித்து இருந்த விவசாய தோட்டத்தில் புகுந்த காட்டு யானை ஒன்று 50-க்கும் மேற்பட்ட வாழை மரங்களை முறித்து சேதப்படுத்தியது. வாழை மரங்களை யானை சேதப்படுத்துவதை அறிந்த கிராம மக்கள் பட்டாசு வெடித்தும், சத்தமிட்டவாறும் யானையை வனப்பகுதிக்குள் விரட்டியதாக கூறப்படுகிறது.


அப்போது யானை வனப்பகுதியை ஒட்டிய குடியிருப்பு வழியாக சென்று மீண்டும் வனப்பகுதிக்குள் சென்று மறைந்தது. அடிக்கடி யானைகள் வனப்பகுதியை விட்டு வெளியேறி விவசாய நிலங்களுக்குள் புகுந்து விவசாய பயிர்களை சேதப்படுத்துவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் அந்தியூர் வனத்துறையினரிடம் தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்த அந்தியூர் வனத்துறையினர், அப்பகுதி மக்கள் இரவு நேரங்களில் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என எச்சரிக்கை விடுத்தும், யானைகள் ஊருக்குள் வராமல் இருக்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வனத்துறையினர் தெரிவித்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!