தாளவாடி அருகே தோட்டத்துக்குள் புகுந்த ஒற்றை காட்டு யானையால் பரபரப்பு

தாளவாடி அருகே தோட்டத்துக்குள் புகுந்த ஒற்றை காட்டு யானையால் பரபரப்பு
X

விவசாய தோட்டத்திற்குள் புகுந்த ஒற்றை காட்டு யானையை விவசாயிகள் டிராக்டர் மூலம் விரட்டினர்.

தாளவாடி மலைப்பகுதியில் விவசாய தோட்டத்துக்குள் புகுந்த ஒற்றை காட்டு யானையால் பரபரப்பு ஏற்பட்டது.

தாளவாடி மலைப்பகுதியில் விவசாய தோட்டத்துக்குள் புகுந்த ஒற்றை காட்டு யானையால் பரபரப்பு ஏற்பட்டது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் வாழ்ந்து வருகின்றன. இரவு நேரத்தில் வனப்பகுதியை விட்டு வெளியேறும் காட்டு யானைகள் அருகாமையில் உள்ள கிராமங்களில் புகுந்து விவசாயிகள் விளைவித்த பயிர்களை சேதப்படுத்துவது தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், தாளவாடி அருகே உள்ள ஜீர்கள்ளி வனச்சரகத்துக்கு உள்பட்ட தமிழ்புரம் ஜோரக்காடு கிராமத்தைச் சேர்ந்த பாசில் என்பவருக்கு சொந்தமான தோட்டத்துக்குள் ஒற்றை காட்டு யானை புகுந்தது. இதனைக் கண்டு அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் அச்சம் அடைந்தனர்.

இதைத்தொடர்ந்து யானையை விரட்டும் முயற்சியில் விவசாயிகள் ஈடுபட்டனர். ஆனால் வனப்பகுதிக்குள் செல்லாமல் காட்டு யானை அங்கு உலவியது. இதனையடுத்து, விவசாயிகள் டிராக்டர் இயந்திரத்தை பயன்படுத்தி காட்டு யானையை வனப்பகுதிக்குள் விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் அரை மணி நேரம் போராடி யானையை வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர். இதனையடுத்து விவசாயிகள் சற்று நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!