தாளவாடி அருகே வழி தவறி கிராமத்திற்குள் புகுந்த குட்டி யானை

Erode news- கிராமத்திற்குள் புகுந்த குட்டி யானை.
Erode news, Erode news today- தாளவாடி அருகே வழி தவறி கிராமத்திற்குள் புகுந்த ஒற்றை குட்டி யானையை வனத்துறையினர் மீட்டனர்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் யானைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. கடந்த சில நாட்களாக வனப்பகுதியில் நிலவும் கடும் வறட்சி காரணமாக யானைகள் ஊருக்குள் வருவது அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில், வியாழக்கிழமை (இன்று) காலை ஆசனூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் இருந்து வழி தவறிய ஒற்றை குட்டி யானை அரேப்பாளையம் கிராமத்திற்குள் புகுந்தது. பின்னர், அங்கிருந்த பொதுமக்களை சுற்றி சுற்றி வந்தது. இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் ஆசனூர் வனத்துறைக்கு தகவல் அளித்தனர்.
சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த வனத்துறையினர் குட்டி யானையை மீட்டு அழைத்து சென்றனர். இதனிடையே, அந்த குட்டி யானை கடந்த 2 நாட்களுக்கு முன்பு பவானிசாகர் வனப்பகுதியில் விடப்பட்ட குட்டி யானை என ஒரு தகவல் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும், குட்டி யானை வனப்பகுதியில் இருந்து எப்படி வழி தவறி வந்தது என்பது குறித்து தெரியவில்லை.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu