ஈரோட்டில் அதிர்ச்சி: கெட்டுப்போன சப்பாத்தியை குழந்தைக்கு கொடுத்த உணவகம்

ஈரோட்டில் அதிர்ச்சி: கெட்டுப்போன சப்பாத்தியை குழந்தைக்கு கொடுத்த உணவகம்
X

Erode news- ஈரோடு காளை மாட்டு சிலை பகுதியில் உள்ள உணவகத்தில் கொடுத்த சப்பாத்தியில் கெட்டுப்போன வாடை வருவதாக புகார் கூறியவரிடம் போலீசார் விசாரணை செய்த போது எடுத்த படம்.

Erode news- ஈரோட்டில் கெட்டுப்போன சப்பாத்தியை குழந்தைக்கு கொடுத்த உணவகத்தை பெற்றோர்கள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Erode news, Erode news today- ஈரோட்டில் கெட்டுப்போன சப்பாத்தியை குழந்தைக்கு கொடுத்த உணவகத்தை பெற்றோர்கள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஈரோடு காளை மாட்டு சிலை அருகே கருப்பண்ணா உணவகம் செயல்பட்டு வருகிறது. இந்த உணவகத்தில், இன்று (7ம் தேதி) காலை லக்காபுரம் கருக்கம்பாளையம் பகுதியை சேர்ந்த ஸ்ரீகாந்த் - உமாதேவி என்ற தம்பதி அவர்களது மூன்றை வயது குழந்தைக்கு சப்பாத்தியை சாப்பிடுவதற்காக வாங்கி கொடுத்துள்ளனர்.

அந்த சப்பாத்தியை சாப்பிட முயன்ற போது அது கெட்டு போனது போல் துர்நாற்றம் வீசியது. உடனே குழந்தைக்கு அந்த சப்பாத்தியை தராமல் சோதித்து பார்த்துள்ளனர். அப்போது இந்த சப்பாத்தி கெட்டுப் போனது தெரிய வந்துள்ளது.

ஏற்கனவே, கடந்த 4 நாட்களாக அந்த குழந்தை காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், கெட்டுப்போன சப்பாத்தியை கொடுத்ததால் தம்பதியர் ஆத்திரமடைந்து உணவகத்தை முற்றுகையிட்டு நியாயம் கேட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

உணவக பணியாளர்கள் பெற்றோர்களின் கேள்வி எதிர்கொள்ள முடியாமல் உணவகத்தின் சட்டரை சாத்திவிட்டு அங்கிருந்து செல்ல முயன்றனர். மேலும் அக்கம் பக்கத்தினர் அவர்களை வளைத்து பிடித்து சரமாரியாக கேள்வி எழுப்பியதால், கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் தவித்து நிற்கின்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.

மேலும், இந்த உணவகம் ஏற்கனவே குழம்பில் பல்லி விழுந்து, உணவு பாதுகாப்புத் துறையினரால் மூடப்பட்டு இருந்தது தெரியவந்தது. தற்போது மீண்டும் குழந்தைக்கு கொடுத்த கெட்டுப்போன சப்பாத்தி கொடுத்ததாக பிரச்சனை ஏற்பட்டுள்ளதால், ஈரோடு மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் தங்கவிக்னேஷ் தலைமையில் ஆய்வு நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
தினம் 1 ! வேகவைத்த முட்டை சாப்பிட்டால் உடம்புக்கு அவ்வளவு சத்துக்கள்  கிடைக்கும் ... வேறென்ன வேணும்...! | Egg benefits in tamil